பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

நாட்டுச்சரக்கு

powder obtained in the process of making jaggery.

நாட்டுச்சரக்கு பெ. (n.) I. வெறிநீர்; arack. 2. சிற்றூர்ப் புறத்தே உருவாக்கும் பழக்கலவைக் காடி; a local fruit beverage imitating the foreign wire. நாட்டுப்பற்று பெ. (n.) ஒருவர்தன் நாட்டு நலனிலும், வளர்ச்சியிலும் கடமை உணர்வோடு இருக்கும் ஈடுபாடு; patriotism, love for one's country. நாட்டுமருந்து பெ. (n.) சிற்றூர்களில் இயற் கையாகக் காணப்படும் பச்சிலை மூலிகை ; native herbal medicine. நாட்டுவைத்தியம் பெ. (n.) உள்நாட் டிலேயே கிடைக்கும் மூலிகை, வேர் போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவம்; indigenous system of medicine.

நாட்பட்டநோய் பெ. (n.) தீராதநோய்; chronic disease.

நாடகமடித்தல் வி. (v.) I. பாசாங்கு செய்தல்; to play the hypocrite. 2.புறத்தே மாற்றுருக்காட்டுதல்; to make an outward show. 3. வீணே, பகட்டாரவாரங் காட்டுதல்; to be showy, ostentatious.

நாடகமாடுதல் வி. (v.) பிறரை நம்பச் செய்யும் பொருட்டு நடித்தல்; fcign innocence, play the innocent. நாடிக்குறிப்பு பெ. (n.) குருதியோட்ட நிலைமை; the state of blood in the arteries.

நாடித்துடிப்பு பெ. (n.) I. குருதியோட்டத் தினால் உடம்பில் பலவிடங்களில் காணும் படபடப்பு; the beating of the pulse felt at several parts of the body owing to the circulation ofblood. 2. நாடி விரைவாய் அடித்தல்; rapid pulsation. நாடியொடுங்குதல் வி. (n.) 1.நாடித் துடிப்பின் ஒடுக்கம்; sinking of the

pulse. 2. துணிவிழக்கை; மன உறுதி குறைகை; losing courage and hope. become down hearted.

நாடுகடத்துதல் வி. (v.) நாட்டிற்கு இரண்டகம் செய்தல், கமுக்கச் செய்திகளை வெளியிட்டுக் காட்டிக் கொடுத்தல் போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கு நாட்டை விட்டு வெளியேற்றுதல்; to exile; to

banish.

நாடோடி பெ. (n.) ஓர் இடத்திலும் நிலையாக இல்லாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்; nomad, wanderer. நாடோடி இனம் பெ. (n.) நிலைத்து வாழாது ஊர் சுற்றித் திரிந்து தொழில் புரியும் இனம்; nomads; vagabond. நாடோடிக் கதை பெ. (n.) நாடோடிகளின் வாழ்வியல் கதை; nomad stories. நாடோடிக்கூட்டம் பெ. (n.) கூட்டங்

கூட்டமாக வாழும் நாடோடிக் குழுமம்; nomad's group. நாணிக்கோணுதல் வி. (v.) வெட்கத்தால் உடலை வளைத்தல்; feel shy. நாத்தனார் Gu. (n.) கணவனின் உடன்பிறந்தாள்; one's husband's sister. நாமக்கட்டி பெ. (n.) நாமம் போட்டுக் கொள்ளப் பயன்படுத்தும் வெள்ளைக் களிமண்கட்டி; pipe clay.

நாமம்போடுதல் வி. (v.) ஒருவரை வல்லமையாக ஏமாற்றுதல்; beguile,

trick.

நாய்ப்பிழைப்பு பெ. (n.) வருத்தி நொந்து கொள்ளக்கூடிய அளவுக்கு அமைத் திருக்கும் வாழ்க்கை நிலை; wretched life; a dog's life.

நாய்வண்டி பெ. (n.) தெரு நாய்களைப்

பிடித்து ஏற்றிச்செல்லும் கூண்டுஊர்தி; van for transporting stray dogs caught in the street.