பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயாய் அலைதல் வி. (v.) ஒரு வேலையை முன்னிட்டுப் பல இடங்களுக்கும், ஓய்வில்லாமலும் தொடர்ந்தும் பல முறை சென்று வருதல்; go after. நார்க்கயிறு பெ. (n.) தேங்காய், பனைமட்டை இவற்றின் நாரிலிருந்து திரிக்கப்படும் கயிறு; கொச்சுக்கயிறு; coir rope.

நார்ச்சத்து பெ. (n.) நாம் உண்ணும் உணவில் இருக்கும் செரிக்கப்பட முடியாததும், மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுவதுமான பொருள்; fibrous matter.

நார்நாராகக் கிழித்தல் வி. (v.) ஒருவரை (அ) ஒன்றை மிகக் கடுமையாகத் திட்டுதல்; criticize harshly.

நார்ப்பட்டு பெ. (n.) பட்டாடை போன்றதும் நாராற் செய்ததுமான ஆடை வகை; cloth made of fibres. நாரதர்வேலை பெ. (n.) ஆட்களிடையே கலகம் மூட்டும் செயல்; act that causes discord.

நாலு எழுத்து பெ. (n.) பிறர் மதிக்கத்தக்க அளவிலான கல்வியறிவு; a little education.

நாலுகாசு பெ. (n.) பிறர் தன்னை மதிக்கிற அளவுக்கு (அ) ஒன்றைத் தனித்து நின்று செய்கிற அளவுக்குப் போதிய பணம்; money necessary.

நாலும் தெரிந்தவர் பெ. (n.) உலக நடப்பை

நன்கு அறிந்தவர்; person of worldly knowledge, worldly wise person. நாவடக்குதல் பெ. (n.) உணவின் சுவையை நாக்கு அடக்கிவைத்தல்; to suppress the sense of taste. நாவடைத்துப்போதல் வி. (v.) பேச முடியாமற்போதல்; to become speechless.

நாவுதல் வி. (v.) கொழித்தல்; to winnow and clear grain from stones.

நாள்காட்டி

பெ. (n.) குறிப்பிடும்

நாற்றம்வீசுதல்

305

கிழமை முதலியவற்றைக் காட்டும் அச்சடிக்கப்பட்டதாள்; calendar. நாள்குறித்தல் வி. (v.) தற்செயல்களுக்கு உரிய நாளைத் தேர்ந்தெடுத்தல்; to select on auspicious day for good events. நாள்போக்குதல் வி. (v) வீணே, பொழுது போக்குதல் (அ) யாதொரு பயனு மின்றிக் காலத்தைக் கழித்தல்; to spend time vainly.

நாள்வைத்தல் வி. (v.) மங்கல நாள் குறித்து உறுதி செய்தல்; to fix an auspicious day.

நாளடைவில் வி. (v.) நாள் செல்லச்செல்ல; incourse of time.

நாளும் கிழமையுமாக வி. (v.) வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சிறப்பு சூழலில் சொல்வது; days of

celebration.

நாளும் நினைத்தல் வி. (v.) ஒவ்வொரு நாளும் இடைவிடாது எண்ணுதல்; to think everyday without break.

நாளை எண்ணிக்கொண்டிருத்தல் வி. (v.) ஒரு நிகழ்வு நடக்கப்போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து எண்ணிக் கொண்டிருத்தல்; count the days. நாளோட்டுதல் வி. (v.) 1. காலங்கழித்தல்;

to pans one's days. 2. காலத்தாழ்வு செய்தல்; to delay.

நாற்சந்தி பெ. (n.) தான்கு தெருக்கள் சந்திக்கும் இடம்; junction of four

streets.

நாற்றங்கால் பெ. (n.) தாற்றுகளை வளர்க்கும் இடம்; seedbed.

நாற்றம் பெ.(n.) அருவருப்பான மணம், துர்நாற்றம்; offensive smell.

ஆண்டுக்கு உரிய மாதம், நாள், நாற்றம்வீசுதல் வி. (v.) தீயநாற்ற

மடித்தல்; to emit a bad smell.