பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலச்சரிவு பெ. (n.) மேடான இடத்தி லிருந்து மண், மலையிலிருந்து பாறை, கல் முதலியவை திடுமெனப் பெயர்ந்துவிழுதல்; landslide.

நிலத்தடி நீர் பெ. (n.) நிலத்தின் அடியில் இருக்கும் நீர்; ground water. நிலநடுக்கம்

பெ. (n.) நிலத்தின் மேற்பரப்பு அடையும் அதிர்வு; earthquake.

நிலபுலம் பெ. (n.) புன்செய், நன்செய் நிலம்; dry and wet lands.

நிலவரம் பெ. (n.) I. நடப்பு நிலை, சூழ்நிலை (நாடு, வீடு முதலிய வற்றின்) condition. 2. (விற்பனை, அளவு முதலியவற்றின்) நிலைமை; report.

நிலவரி பெ. (n.) விளைநிலத்துக்காக அரசு தண்டும் ஆண்டு வரி; land revenue. நிலாச்சோறு பெ. (n.) நிலவொளியில் உண்ணும் உணவு; moonlight dinner. நிலுவை பெ. (n.) 1. வரவேண்டிய தொகையின் மீதித்தொகை; arrears. 2. வழக்கு, திட்டம் போன்றவற்றில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை;

பெ. (n) உடல்

pending. நிலைக்கண்ணாடி முழுவதும் பார்க்கும்படி ஓரிடத்து நாட்டப்பட்ட பெரிய கண்ணாடி;a large fixed mirror.

நிலைகுலைதல் வி. (v.) 1. நிலைமை தவறுதல்; to be ruined in circumstances. 2. நெறிவழுவுதல்; to swerve from the

path of virtue. 3. சீர் குலைதல், சீர் கெடுதல்; get disrupted. நிலைநாட்டுதல் வி (v.) நிலை கொள்ளும்படிச் செய்தல், நிலைக்கச் செய்தல், நிறுவுதல்; enforce (peace, law and order, establish rights, facts, etc.,).

நிலைமாறுதல் வி. (v.) I. இடம் முதலியன நிலை மாறுதல்; to change in place, principles or circumstances; change of

நிழற்கூத்து

307

state. 2. சொல்லில் எழுத்துகள் இடம் பிறழ்தல்; to be transposed as letters in words.

நிலைமை பெ. (n.) ஓர் இடம் அல்லது ஒருவர் இருக்கும் நல்ல அல்லது இக்கட்டான சூழ்நிலை; situtation, environment.

நிலையழிதல் வி. (v.) தன்னிலையில் தோற்றுப் தாழ்தல், இழிதல், போதல் ; to defeat. நிலையறிதல் வி (v.) 1.எண்ணம் அறிதல்; to know the idea. 2. நிலைவரமறிதல்;

to know the condition. நிலையாமை பெ. (n.) 1. உறுதியிராமை, நிலையில்லாமை; instability, as of riches; transitoriness. 2. உறுதியின்மை; fickleness, wavering.

நிலையூன்றுதல் வி. (v.) 1. உறுதிப்

படுதல்; to obtain a fim footing, become firmly settled in a place. 2. மர முதலிய வேரூன்றுதல்; to become firmly, rooted

as a tree.

நிழலாடுதல் வி. (v.) எந்த ஓர் உணர்வும் மெல்லியதாகத் தெளிவின்றித் தோன்றுதல்; (of emotions) to appear vaguely; to be overshadowed by something.

நிழலுலர்த்தல் பெ. (n.) நிழலில் மருந்து முதலியவைகளை உலரவைக்கை; drying in the shade, as medicines. நிழற்குடை பெ.(n.) (போக்குவரத்தை

ஒழுங்குபடுத்தும் காவலர்க்கும். பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்களுக்கும்) நிழல் தருவதற்காக வட்டமான (அ) நீள் செவ்வகக் கூரையுடைய அமைப்பு; shelter. நிழற்கூத்து பெ. (n.) பாவையின் நிழலைத் திரையில் விழச் செய்து நிகழ்த்தும் ஆட்டவகை; shadow puppet play.