பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

நிற்றல் (நில்தல்)

நிற்றல் (நில்தல்) வி. (v.) 1. கால்கள் ஊன்றி உடம்பு முழுவதும் நெடிதாக நிமிர்ந்திருத்தல்; to stand. 2. காலந் தாழ்த்துதல்; to wait. 3. நிலைத் திருத்தல்; to be permanent. நிறுத்திச்சொல்லுதல் வி. (v.) வேக மின்றித் தெளிவாய்ச் சொல்லுதல்; to pronounce slowly and distinctly with

proper pauses.

நிறுத்தியெழுதுதல் வி. (v.) I. செவ்வை யாயிருக்கும்படி மெதுவாய் எழுதுதல்; to write legibly and slowly. 2. இடம் விட்டு எழுதுதல்; to leave proper spaces in writing.

நிறுத்திவிடுதல் வி. (v.) தொடர்ந்து நிகழ்த்துக் கொண்டிருக்கும் ஒரு செயலை நிறுத்துதல்; to stop the continous process. நிறுத்திவைத்தல் வி. (v.) தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு செயலை இடைக்காலமாக நிறுத் துதல்; to stop temporarily the continuous process.

நிறுத்துதல் வி. (v.) I. மேற்செல்லா திருக்கச் செய்தல்; to stop as a person; to arrest progress. 2. தள்ளிவைத்தல்; to put off. 3. படிக்கும்போதும், பாடும் போதும் உரியவிடங்களில் நிறுத் துதல்; to make proper pauses, as in reading or singing.

நிறுவனர் பெ. (n.) ஓர் அமைப்பைத் தொடங்கியவர்; founder.

நிறைதல் வி (v.) I. நிரம்புதல்; to become fullto bereplete. 2. மிகுதல்; to abound. 3. எங்கும் நிறைந்திருத்தல்; to be everywhere.

நிறைமாதம் பெ. (n.) முழுவளர்ச்சி அடைந்த குழந்தையைப் பெற்றெடுக்

கும் பத்தாவது மாதம்; the last month of pregnancy.

நிறைவுவிழா பெ. (n.) ஒன்று முடிவு பெறும் நாளில் நிகழ்த்தப்படும் விழா; concluding function. நிறைவேற்றுதல் வி. (v.) முடிவு பெறும் படி (அ) பயன்கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளுதல்; செயற்படுத்துதல்; to carry out, to fulfil, to implement. 2. நடத்துதல்; to perfom. நின்றுபோதல் வி. (v.) வேலை முதலியன நடவாதுபோதல்; to stop, cease as

work. நின்னாங்கூலி பெ. (n.) வேலை செய்யாமல் நின்றுகொண்டு கூலி பெறுதல்; getting wages without doing

any work.

நினைத்தல் பெ. (n.) 1. கருதுதல்; to think. 2.நினைவிற்கொணர்தல்; beremember. 3. நோக்கமாகக் கொள்ளுதல்; to intend design, have in view. 4. கற்பனை செய்தல்; to imagine. நினைப்பாயிருத்தல் செ.கு.வி. (v.i.) ஒரு செயலின் மீதே மனத்தை நிலைப் படுத்துதல்; to concentrate one's thoughts.

நினைப்பூட்டுதல் வி (v.) I. நினைவு

படுத்துதல்; to put in mind. 2.அறிவுறுத்துதல்; to suggest, indicate. நினைவஞ்சலி பெ. (n.) ஒருவர் இறந்த நாளில் அவரை நினைத்துச் செலுத்தும் நினைவேந்தல், இரங்கல்; homage, someones death anniversary. நினைவுச்சின்னம் பெ. (n.) நினைவில் நிறுத்துவதற்காகவும், நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாள மாக நிறுவப்படுவது; memorial,

monument.

நினைவுமறதி பெ. (n.) மறந்துவிடுதல், நினைவின்மை; loss of memory.