பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

நீராகாரம்

நீராகாரம் பெ. (n.) முதல் நாள் இரவு வடித்த சோற்றில் நீர் ஊற்றிவைக்கப் பட்டதால் சற்றே புளித்த நீர்; water in which cooked rice is kept overnight. நீராடுதல் வி. (v.) 1. எண்ணெய்க் குளியல்; oil bath. 2. குளித்தல்; to bath. நீருட்டபானம் பெ. (n.) உடலிலிருந்து நீரிழப்பினால் வெளியேறும் நீர்ச் சத்தை ஈடுகட்ட உட்கொள்ளப்படும் பானம்; rehydration drink.

நீரேற்றுநிலையம் பெ. (n.) குழாய் வழி

யாக நீர் எல்லா இடங்களுக்கும் சீராகச் செல்வதற்கான அழுத்தத்தைத் தரும் எந்திரம் உள்ள நிலையம்; water pumping station.

நீலிக்கண்ணீர் பெ. (n.) உண்மையான வருத்தமின்றிப் பொய்யாக வடிக்கும் கண்ணீர்; insincere tears.

நீவுதல் வி. (v.) 1. தடவிக்கொடுத்தல்; to stroke, handle softly. 2. தாள், துணி போன்றவற்றைச் சுருக்கமின்றி அழுத்தி இழுத்தல்; smooth out, to

press.

நிற்றுருண்டை பெ. (n.) திருநீற்றுக்காக

உருட்டிவைக்கும் சாணவுருண்டை; cow dung ball for preparing sacred ashes. நிறுபூத்தல் பெ. (n.) I. சாம்பல்நிறம் பிடித்தல்; to be covered with dirt, ashy coating. 2. உடலில் அழுக்குப்படிதல்; to be covered with dirt, as the body.

நு

நுங்கு பெ. (n.) இளம்பனங்காய்க்குள் அமைந்துள்ள இனிப்புச் சுவை யுடைய வழவழப்பானசதைப்பகுதி; pulpy kernal of a tender palmyra fruit. நுங்குந்நுரையுமாக வி.எ. (adv.) நீர்மப் பொருளின் மேலெழும் நுரை; foany.

ஆற்றில் வெள்ளம் நுங்கும் நுரையு மாக கரைபுரண்டு ஓடியது'. நுணுக்கெழுத்து பெ. (n.) பொடியாக எழுதும் எழுத்து; letter written in a very small hand. அவள் மிகவும் நுணுக் கெழுத்தில் எழுதுவாள்.

நுணுகி வி.எ. (adj.) 1. கூர்ந்து; with a sharp focus. பாட்டின் பொருளை நுணுகி ஆராய்ந்து பார்க்க வேண்டும்'. 2.மெலிந்து; lean. 'இசைக்கலையை நுணுகி ஆராய்ந்து படித்திருக்கிறார் என்பது அவரின் பேச்சில் இருந்து தெரிகிறது.

நுரைத்தல் வி. (v.) 1. நீர் முதலியன

கொப்புளங்கொள்ளுதல்; to froth, foam, effervescence. 'மாட்டின் வாய் நுரை தள்ளுகிறது' . 2. நுரைவரும் படிச் செய்தல்; to work up a lather. 'வழலைக் கட்டியை நுரைக்கக் குழைத்து முகத்தில் பூசு'.

நுரைத்தெழுதல் வி. (v.) பொங்குதல்; effervescence. சர்க்கரைப்பாகு நுரைத் தெழுகிறது, பார்த்து இறக்கு’. நுரைதள்ளுதல் வி. (v.) நுரையை வாயி லிருந்து வெளியிடுதல்; to foam at the mouth. 'விரைவாக ஓடிவந்த காளை யின் வாயில் நுரைதள்ளுகிறது'. நுழை பெ. (n.) சிறுவழி; narrow way. நுழைதல் வி. (v.) I. இடுக்கலான இடைவழியுட்செல்லுதல்; to creep through a narrow passage; to penetrate. திருடன் பலகணி வழியாய் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்'. 2. நுண்ணிதாக விளக்குதல்; to be impressed in one's mind. 'அது அவன் அறிவில் நுழையவில்லை'.

நுழைவாசல் பெ. (n.) திட்டிவாசல்; low or small gate, wicket. 'இந்தியாவின் நுழைவாயில் மும்பை.

நுழைவாயில் பெ. (n.) கட்டடம், திடல் முதலியவற்றினுள் செல்வதற்கு வெளி