பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்ப்பந்தம் பெ. (n.) I. நெய்யூற்றி எரிக்கும் பந்தம்; torch fed with ghee. 2. இறந்தவரின் உடலைச் சுற்றி பெயரன், பெயர்த்திகள் பிடிக்கும் நெய்யில் நனைத்த பந்தம்; torch fed with ghee holding grand son and grand daughter at the time of funeral. 'தாத்தாவின் மரணத்தில் பேரன் பேரத்திகள் நெய்ப்பந்தம் பிடித்தல் மரபு.

நெய்விளக்கு பெ. (n.) 1. கோயில்களில் நெய்யூற்றியெரிக்கும் விளக்கு; lamp fed with ghee. 2. தெய்வத்துக்கு முன் ஏற்றும் மாவிளக்கு; lamp of dough burnt with ghee before an idol. நெரிகட்டி பெ. (n.) தெறிக்கட்டி பார்க்க;


seeneri-

k-katti.

நெரிசல் பெ.(n.) 1. தெரிந்தது; anything broken or cracked. 2. நெருக்கமாக இருக்கும் கூட்டம்; the state of being overcrowed, as of a place. 'கடற்கரைக் கூட்டத்தில் நெரிசல் மிகுதி' 3.மனவேறுபாடு ; misunderstanding. நெரித்தல் வி. (v.) 1. நொறுக்குதல்; to break to pieces. 2. நசுக்குதல்; to crush, press, squeeze. பொதுகூட்ட நெரிசலில் சிக்கிக் காலை இழந்து விட்டான்.3. கையால் கூலம் முதலியவற்றை திமிண்டுதல்; torub or crush with the hand, as ears of grain. 4.கைவிரல்களைச் சுடக்குதல்; to crack, as the fingers. 'கால் விரல்களைக் கொஞ்சம் நெரித்துவிடு'. நெருக்கடி பெ. (n.) 1. நெருக்கம்; emergency; pressurizing; pressure. நெருக்கடியில் வந்து பணம் கேட்டான். 2. இக்கட்டான நேரம்; busy time, time of preoccupation critical time. 'இந்தியாவுக்கு இது நெருக் கடியான நேரம். 3. போக்குவரவு, ஊர்திகள், மக்கள் போக வர இயங்க இடம் போதாத நிலை; want of space. 4.தேவையான பொருள்கள் கிடைக்

நெருங்குதல்

313

காத நிலை, பற்றாக்குறை; financial squeeze or straits. 'பணநெருக்கடி'. 5. கடுந்துன்ப நிலை; difficulty. நெருக்கடி நிலை பெ. (n.) உள்நாட்டுப் போர், கலகம் முதலானவை ஏற்படுகின்ற, நேரத்தில் அரசு கூடுதல் அதிகாரங்களை மேற்கொண்டு செயல்பட வேண்டிய நிலை; state of emergency in a country.

நெருக்கம் பெ. (n.) I. இடைவெளி யில்லாத செறிவு; denseness, crowded state. 2. ஒழுக்கம்; narrowness, straitness, tightness. நெருக்கமான பாதை'. 3. வேலைக்கடினம், வேலையினால் ஏற்படும் துன்பம்; pressure of business, closeness of application. 4. விரைவு; urgency. 5. குறைந்த வேறுபாடு, மிகுந்த ஒற்றுமை; affinity, closeness. நாட்டியத்திற்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு'. நெருக்கமான பெ. (n.) I. செறிவான்; dense. 2. இறுக்கமாக இணைக்கப் பட்ட; compact.

நெருக்கித்தள்ளுதல் வி. (v.) முட்டி மோதுதல்; to knock against. நெருக்கித்தாக்குதல் வி. (v.) சூழ்ந்து கொண்டு தாக்குதல்; to beset. நெருக்கிப்பார்த்தல் வி. (v.) I. வற்புறுத் துதல்; to press. 2. முயற்சி யெடுத்தல்; to try, take pains. 'தேர்வுக்கு எவ்வளவோ நெருக்கிப் பார்த்தேன். இருந்தாலும் மதிப்பெண் குறைவு தான்.

நெருக்குதல் வி. (v.) 1. செறியச் செய்தல்; to put close, to set thick. 2. சுருக்குதல்; to circumscribe, contract. 3. தாக்குதல்; to attack, assail, assault. நெருங்குதல் வி. (v.) அண்மையாதல்; to be near, approximate. 'பேருந்து நெருங்கி வந்துவிட்டது'.