பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெற்றிப்பற்று பெ. (n.) தலைவலி, மண்டைக்குத்தல் முதலிய நோய் களுக்கு நெற்றியில் போடும் மருந்துப்பற்று; an ointment, or liniment or paste applied to forehead in cases of

headache cold, neuralgia and other nervous effections.

நெற்று பெ. (n.) தேங்காய் முதலிய வற்றின் முதிர்ந்து காய்ந்த காய்; a dried, mature seed or nut. 'தேங்காய்,

நெற்றுக்காயாகப் பார்த்து வாங்கி

வா.

நெறிக்கட்டிக்காய்ச்சல் பெ. (n.) புண் அல்லது கட்டி அல்லது யானைக்கால் நோய் அல்லது இரண்டு அக்குள் அல்லது இரண்டு தொடைச்சந்திலும் கட்டி ஏற்படுவதால் உண்டாகும் காய்ச்சல்; filarial fever; fever accomanying the swelling of the lymphatic glands. நெறிக்கட்டுதல் பெ. (n.) புண்கட்டிக்காக உடற்சந்துகளிலுண்டாகும் புடைப்பு; inflammation of the lymphatic gland. நெறிதவறிநடத்தல் வி. (v.) முறை தவறி நடத்தல்; to behave badly. 'நெறிதவறி நடந்தால் வாழ்வில் முன்னேற முடியாது.

நெறிப்படுதல் வி. (v.) ஒழுங்குபடுதல்; to be put in order, to be kept with in bounds.

நெறுநெறுத்தல் வி. (v.) பல்லைக் கடித்தல்; to crash one's teeth. 'அச்ச மிகுதியால் நெறு நெறுவென்று பல்லைக் கடித்தான்'.

நெறுநெறெனல் பெ. (n.) 1. ஓசைக் குறிப்பு; crashing sound. 'சினத்தால் நெறுநெறென்று பல்லைக் கடித்தான்'. 2. முறிதற் குறிப்பு;

breaking. 'முருங்கை மரம் நெறுநெறு வென்று முறிந்து விழுந்தது'.

நேர்முகவண்ணனை

நே

315

நேயர் பெ. (n.) வானொலி, தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை விரும்புபவர்; (radio) listeners, (television) viewer. நேயர் விருப்பம் கேட்டால் மனத்துக்கு ஆறுதல் கிடைக்கும்'. நேர்த்தி பெ. (n.) சிறப்பு; excellence, elegance. 'அவர் கதை சொல்லும் நேர்த்தி சிறந்தது'.

நேர்ந்துகட்டுதல் வி. (v.) வேண்டுதலுக் காகக்காப்புக்கட்டுதல்; to make a vow and tie a thread in token of it on the thing vowed.

நேர்ந்துகொள்ளுதல் வி. (v.) தான் விரும்பியது நடந்தால் காணிக்கை யாக இதைச் செய்வேன் என்று கடவுளிடம் வேண்டுதல் செய்து கொள்ளுதல்; to take vow. நேர்ந்துநிரவிப்போதல் வி. (v.) சற்று

ஏறக்குறைய இருந்தாலும் சரிக் கட்டிக்கொண்டு போதல்; to rectify, correct, redress, to adjust, reimburse. நேர்ந்துவிடுதல் வி. (v.) தெய்வத்துக்கு வேண்டுதல் செய்வதற்காக விலங்கு முதலியவற்றைக் கோயிலுக்கென விட்டு விடுதல்; to offer or consecrate to a deity by a vow, as an animal. நேர்மாறு பெ. (n.) சொல்லுவதற்கு முற்றும் எதிரானது; just opposite. குணத்தில் அவன் மனைவி அவனுக்கு நேர்மாறு'.

நேர்முகத் தேர்வு பெ. (n.) வேலைக்கோ, படிப்புக்கோ விண்ணப்பம் செய்த வரின் தகுதியை வாய்மொழியாகக் கேள்விகள் கேட்டு அறியும் தேர்வு;

interview.

நேர்முகவண்ணனை பெ.(n.) விழா,

விளையாட்டு போன்றவற்றினை நேரிடையாகப் பார்த்து வானொலி, தொலைக்காட்சியில் உடனுக்குடன்