பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேற்றையதினம் பெ. (n.) & வி.எ. (adv.) தெருநல்; yesterday.

நை

நைநையெனல் பெ. (n.) 1. இகழ்ச்சிக் குறிப்பு; expr.signifying contempt. 2. குழந்தைவிடாது அழுது தொந்தரவு செய்தல் குறிப்பு; expr. signifying fretting cry, pulling as of children. வயிற்று வலியால் குழந்தை நைநையென அழுதுகொண்டே இருக்கிறது.

நையத்தட்டுதல் வி. (v.) தூளாகும்படி தட்டுதல்; striking to make into powder. நையநருக்குதல் வி. (v.) பொடியாக் குதல்; to pulverise comminute.

நையப்பாடுதல் வி. (v.) பல்லைக்காட்டிக் கெஞ்சுதல்; to cringe.

நையப்புடைத்தல் வி. (v.) உடம்பு தளர நன்றாக அடித்தல்; to be labour thrash soundly.

நையமசிதல் பெ. (n.) நன்றாய் அரை படுகை; grinding to oneness.

நையாண்டி பெ. (n.) I. பகடி(கேலி); scoff, ridicule, mockery, sarcasm. 2. சிரிப்புச் சொல்; jest drollery. 'யாரையும் நையாண்டி செய்யாதே'.

நொ

நொசநொசத்தல் வி. (v.) சோறுங் கஞ்சியும் கெட்டுவிட்டு நொந்து போதல் ; to spoil, as of boiled rice, etc., நொசநொசவெனல் தொ.பெ.(vb1.n.) சோறு நொந்துபோன

யடைகை; mashed rice.

நிலை

நொட்டக்கை பெ. (n.) நொட்டாங்கை

பார்க்க; see nottāngai.

நொட்டாங்கை பெ. (n.) இடது கை; left hand. நொட்டாங்கையால் செய்யும் வேலை சிறக்காது'.

நொண்டிச்சாக்கு

317

நொட்டைச்சொல் பெ. (n.) குறைச்சொல்; fault finding words. நொட்டைச்சொல் சொல்லாதே'.

நொடி பெ. (n.) 1. நோய் என்பதோடு இணைந்து வரும் சொல்; word, phrase, language, speech.2. முது மொழி; wise saying. 3. புதிர்; riddle, enigma. 4. கதை; story. 5. செய்யுள்; stanza. 6.சிறுபொழுது வினாடி; second. நொடித்தல் பெ. (n.) வணிகத்தில் இழப்படைதல் (நட்டமடைதல்); to break down completely, as a concern. 'வணிகம் நொடித்துப் போயிற்று'. நொடித்துப்போதல் வி. (v.) நிலை குலைதல்; to become straitened in circumstances; to become a bankrupt. நல்லா வாழ்ந்தார், இப்போது நொடிந்துப் போனார்.

நொடுக்குநொடுக்கெனல் பெ. (n) 1. தட்டுதலால் உண்டாகும் ஒலிக் குறிப்பு; onom,expr. signifying, slight tapping or knocking noise. 2. நடக்கும் போது பாதக்குறட்டில் உண்டாகும் ஒலிக் குறிப்பு; clacking, as of wooden sandals in walking.

நொண்டி' பெ.(n.) 1. முடமான ஆள்(அ)

விலங்கு; lame person or creature. 2. முடம்; crippled condition, as of the leg or arm. 3. பொய்க்காலால் நடிப்போன்; person who dances on stilts.

நொண்டி' பெ. (n.) நொண்டியடித்துக் கொண்டு சென்று எதிர் அணி யினரைத் தொடும் விளையாட்டு வகை; the game of hopping with folded leg.

நொண்டிச்சாக்கு

Gu. (n.) தடை

பெறாமல் போன நிகழ்வு ஒன்றுக்குக் காட்டப்படும்

வலுவில்லாத

கரணியம்; a lame excuse.