பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

நோய்யெதிர் ஆற்றல்

and its effect. நோய்நொடி இல்லா உடம்பொடு வாழ வேண்டும். நோய்யெதிர் ஆற்றல் பெ. (n.) நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளால் நோய் உண்டாகாதவாறு உடலில் உள்ள எதிர்க்கும் ஆற்றல்; immunity. நோய்வாய்ப்படுதல் வி. (v.) நோயினால் தாக்கப்படுதல்; to fall ill. நோய் வாய்ப்பட்ட உடம்பு. நோய்விழுதல் பெ. (n.) செடிகளில் நோய்பிடிக்கை; infection as of plants. நோயறை பெ. (n.) நோயாளிகள் இருக்கும் அறை; patient's room. நோயறை பக்கம் ஒலியை அதிகப் படுத்தாதே.

நோயாளி பெ.(n.) நோயால் தாக்கப் பட்டவன்; sick person, patient invalid. நோவாளி பெ. (n.) I. நோயாளி பார்க்க. 2.ஏழை; poor man.

நோவு பெ. (n.) I.வலி; pain, hurt, anguish. உடல் நோவு குறைய வெந்நீரில் குளிக்க வேண்டும்'. 2. துன்பம்; mental anguish. 3. நோய்; disease. 4. மகப் பேற்று நோய்; labour pains. 5. இரக்கம்; pity.

நோவுநொடி பெ. (n.) நோய்நொடி பார்க்க.

நோன்பிருத்தல் வி. (v.) உணவு உட் கொள்ளாதிருத்தல்; to observe ceremonial fasting.

நோன்பு பெ. (n.) 1. ஆவியின் (ஆன்மா) தூய்மைக்காக ஓரிருவேளை அல்லது

நாள் முழுமையும் உண்ணாதிருக்கை;

ceremonial fasting abstinence from food. 2. தவம்; penance, religious austerity. நோன்புக் கயிறு பெ. (n.) காப்பு நாண்;a sacred string.

நோன்பு முடி பெ. (n.) நோன்பு முடிச்சு

நோன்புமுடிச்சு பெ. (n.) தாலிச்சரட்டில் கோக்கப்பட்ட குழாய் போன்ற பொன்னுருக்கல்; a pair of cylindrical pieces of gold worn on the string containing the marriage badge. நோன்புதுறத்தல் பெ. (n.) உண்ணா நோன்பை துறத்தல்; to end the ceremonial fasting.

நோன்பு பிடித்தல் பெ. (n.) உண்ணாதிருக் கையை மேற்கொள்ளல்; to observe a fast.

பக்கபலம் பெ. (n.) (ஒருவருக்கு அல்லது ஓர் அமைப்புக்கு) துணையாக இருந்து ஊக்குவிக்கும் வகையில் அல்லது சிறப்பாகச் செயல்படும் வகையில் அமையும் துணைதரவு (ஆதரவு); support; strength; mainstay. பக்கவாட்டுத்தோற்றம் பெ. (n.) ஒன்றின் அல்லது ஒருவரின் இடது அல்லது வலது பக்கத்தோற்றம்; profile. பக்கவாத்தியம் பெ. (n.) இசை அரங்கத்தில் முகாமையான இசைக் கலைஞருக்குத் துணையாக வாசிக்கப்படும் இசைக் கருவி; accompaniment (in a concert). பக்கவாதம் பெ. (n.) நேர்ச்சி (விபத்து) அல்லது நோயின் கரணியமாக மூளையும் நரம்பு மண்டலமும் தாக்கப்பட்டு உடலின் ஒரு பகுதி அசைக்க முடியாதபடி செயலிழந்து விடும் நிலை; paralysis. பக்கவிளைவு பெ. (n.) மருத்துவமும்

மருந்தும் நோய் தீர்க்கும்போது ஏற்படுத்தும் பக்க விளைவு; side effect (of a treatment medicine).

பக்கவேர் பெ. (n.) ஆணி வேரிலிருந்து கிளைத்துச் செல்லும், சல்லி வேரை விடப் பெரிய வேர்; secondary root of a

tree.

பார்க்க.