பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்குப்பக்கெனல் பெ. (n.) 1. அச்சக் குறிப்பு; onom expr. of throbbing rapidly as the heart through fear. 2. வெடிக்கச் சிரித்தற் குறிப்பு; bursting laughter. பக்குவஞ்சொல்லுதல் வி. (v.) I. பொருத் தருள்வது; to tender apology. 2. செய்வகை; any work or business.

பக்குவப்படுத்துதல் வி. (v.) பதப்படுத் துதல்; preserve.

பக்குவம் பெ. (n.) 1. (-ஆக

-ஆன) (குறிப்பிட்ட உணவுக்கே உரிய) திண்ம (அ) நீர்ம நிலையோ சுவையோ மாறிவிடாமல் இருக்க வேண்டிய அளவாம் தன்மை; (the right) proportion; consistency. 2. நிலைத் திணைகளில் காய்த்தல், பூத்தல் முதலியவற்றிற்கான பருவம்; stage or season (for an event in the growth of a plant). பக்கெனல் பெ. (n.) 1. ஒலிக்குறிப்பு; bursting, as with sudden laughter. 2. விரைவுக் குறிப்பு; being sudden.

சிரிப்பின்

பக்கோடா பெ. (n.) நீர் ஊற்றிப் பிசைந்த கடலை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய் முதலியவற்றைச் சேர்த்துச் சிறு சிறு பிசிறுகளாக எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கும் ஒரு திண்பண்டம், பகுவடை, முறுவடம், முறுவு; a spicy savoury prepared with chickpea paste fried in oil.

பகட்டுதல் வி. (v.) I. போலி வெளிச்சம் காட்டுதல்; to shine with a false glitter, as plated articles. 2. தற்புகழ்ச்சி செய்தல்; to brag. 3. போலிப்பெருமை காட்டுதல்; to make a vain show; to be foppish.

பகடக்காரன் பெ. (n.) சூழ்ச்சிக்காரன்;

artful person.

பகடைக்காய் பெ. (n.) (காய்களைப் பயன்படுத்தி) விளையாடும் விளை யாட்டுகளில் விளையாடுபவர்கள்

பகிர்ந்துகொள்ளுதல்

321

இருவரும் ஒருவர் மாற்றி ஒருவராக உருட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட ஆறு பக்கங்கள் உடைய மாழையா (உலோகத்தா)ல் அல்லது மரத்தால் ஆன சிறு துண்டு; தாயக்கட்டை ; a dice.

பகபகவெனல் பெ. (n.) 1. தீ எரியும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு; onom, expr. of cracking of fire. 2. வயிறு பசியால் எரிதற் குறிப்பு; expr. signifying buming or smarting sensation of hunger.

பகல் கனவு பெ. (n.) நிறைவேறும் வாய்ப்பு சிறிதும் இல்லாத கற்பனை; fantasy; daydream.

பகல்(ற்)கொள்ளை பெ. (n.) (ஒன்றுக்காகக் கொடுக்கும் பணத்திற்குக் கூடுதலாக) நயனின்மை (அநியாயம்) என்று கூறும் அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலை; day light robbery. பகல்வெளிச்சம் போடுதல் வி. (v.) பகலில் ஏமாற்ற முயலுதல்; to attempt to deceive in broad day light. பகல்வேடக்காரன் பெ. (n.) I. பகற் காலத்தில் பலவேடம் பூண்டு பிழைப்போன்; a person who lives by amusing people with his disguises during day time. 2. வெளிவேடக்காரன்; hypocrite.

பகல்வேடம் பெ. (n.) நல்லவர் போன்ற நடிப்பு ; வெளிவேடம்; one's mask of innocence; dissemblance.

பகிர் வி. (v.) (இருப்பதைத் தேவையின் அடிப்படையில்) பிரித்தல்; பங் கிடுதல்; share; divide and distribute. பகிர்ந்துகொள்ளுதல் வி. (v.) (பட்டறிவு, மகிழ்ச்சி, துயரம் முதலியவற்றைப் பிறருடன்) பரிமாறிக் கொள்ளுதல்; share (one's) experience, happiness, sorrow, etc., with another.