பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

பச்சைமண்

பச்சைமன் பெ. (n.) 1. ஈரமுள்ள மண்; moist carth. 2. மட்பாண்டங்களுக் காகப் பிசைந்த மண்;

tempered clay, as for pots, opp to sutla-man. 3. இனங் குழந்தை; young infant tender child, 4. வேகாத மண்; unburnt mud.

பச்சை மரம் பெ. (n.) உயிருள்ள மரம்; living tree. பச்சைமாப்பொடி பெ. (n.) 1. குழம்பு செய்வதற்கு உதவும் அரிசி மாப் பொடி; rice flour used in preparing sauce. 2. தெய்வத் திருமேனிகளுக்குத் திருமுழுக்காட்டுச் செய்யப் பயன் படும் பொடி; rice flour used for the

divine both of idols.

பச்சை மிளகாய் பெ. (n.) பழுக்காத மிளகாய், பச்சை நிறமுள்ள மிளகாய்; green chilli.

பச்சை மூங்கில் பெ. (n.) ஈர மூங்கில்; wet bamboo which is green in colour as opposed to dried bamboo.

பச்சையரிசி பெ. (n.) நெல்லை வேக வைக்காது குத்தியெடுத்த அரிசி; raw rice.

பச்சையாய்த் தின்றல் பெ. (n.) காய்கறி களையோ, ஊனையோ பச்சையாய்த் தின்னுதல்; eating green vegetables and raw meat without boiling or cooking

them.

பச்சையாய்ப் பேசுதல் வி. (v) 1. வெளிப் படையாய்ப் பேசுதல்; to be out spoken. 2. பச்சைபச்சையாய்ப் பேசுதல் பார்க்க. பச்சையுடம்பு பெ. (n.) 1. பிள்ளை பெற்றவளின் மெல்லியவுடம்பு: the delicate body of a woman after parturition. 2. பச்சை நிறவுடம்பு; green pallor of the skin. 3. நோயாளியின் மெலிந்த உடம்பு; emaciated body ofa convalescent.

பச்சை வயிறு பெ. (n.) 1. பிள்ளை பெற்ற வயிறு; painful abdomen after parturition. 2. வெந்த வயிறு; inflamed abdomen. 3. வெறும் வயிறு; empty stomach. பச்சைவாழை பெ. (n.) I. வாழை வகை; dwarfbanana. 2. சமைக்காத வாழைக் காய்; raw plantain which is not cooked. பச்சை வீடு பெ. (n.) பருவமெய்திய பெண்ணை மறைவாய் இருத்தி வைத்ததற்குரிய பசுந்தழையாலான குடில்; green olai hut which is used for a age attend. பச்சைவெண்ணெய் பெ. (n.) காய்ச்சாத பாலிலிருந்து எடுக்கும் வெண்ணெய்;

butter churned from unboiled milk.

பச்சோந்தி பெ.(n.) 1. இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன் தோலின் திறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையை இயற்கையாகப் பெற்ற ஒரு வகை ஓணான்; chameleon. 2. நிலையான தன்மை இல்லாதவன்; சூழ்நிலைக்குத் தருந்தபடி மாறுபவன்; opportunist.

பச்சோலை பெ. (n.) காயாத ஓலை; green olai.

பசப்புதல் வி. (v.) 1. இன்முகங்காட்டி ஏய்த்தல்; to deceive, allure, fascinate, gain the affection. 2. அலப்புதல்; to chatter, talk too much.

பசலை பெ. (n.) 1. அழகுத்தேமல்; beauty spots on the skin of a woman. 2. பொன்னிறம்; gold colour. 3. இளமை: infancy, tenderness. 4. கவலையின்மை; carelessness indiffemce. 5. மனக்கவலை;Testiesmes ofmind. 6. வருத்தம்; affliction. பசிக்கொட்டாவி பெ. (n.) பசியால்

உண்டாகும் கொட்டாவி; yawning from hunger.

பசிக்கொடுமைபெ (n.) பசியால் ஏற்படும் கொடுமை; Severity ofhanger.