பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிகட்டுதல் பெ. (n.) மெல்லிய துணித் துண்டை மருந்து நீரில் தனைத்துப் புண், வீக்கம், வலியுள்ள இடங்களில் கட்டுதல்; bandaging wounds sores, swellings or steeped in medicinal oil or other solutions.

பட்டிநோன்பு பெ. (n.) மாட்டுப் பொங்கல்;

the festival or cemonial boiling of rice on the mattu-

p-pongalday. பட்டிப்படி பெ. (n.) கால்நடை காக்கும் கூலி; allowance for herding cattle. பட்டிப்பொங்கல் பெ. (n.) மாட்டு மந்தையிலிடும் பொங்கல்; pongal ceremony performed in the pen for cattle. பட்டி பார்த்தல் வி. (v.) 1. தச்சு வேலையில் மரப்பலகை மற்றும் நிலைப்பேழை, வாசற்கால் முதலியவற்றில் வண்ணம் பூசுமுன் துளைகளோ ஒழுங்கற்ற பகுதிகளோ இருப்பின் அவற்றைச் சமப்படுத்துவதற்கு 'மக்கு' என்னும் மெழுகுப் பொருள் கொண்டு சரி செய்தல்; in carpentary fill the holes crevices in a surface with wax before painting. 2. அனைத்து எந்திர ஊர்திகளிலும் அவற்றின் புற அமைப்பில் நசுங்கல், புடைப்பு, கீறல் முதலியன ஏற்படின் அவற்றை இரும்புத்தகடு கொண்டு பற்ற வைத்தும் சரி செய்தல்; tinkering. பட்டிமண்டபம் பெ. (n.) 1. கலைபயிற் கூடம்; hall for the meeting of scholars. 2. ஓலக்க மண்டபம்; hall of royal audience.

பட்டிமன்றம் பெ. (n.) அணியினராகப்

பிரிந்து, கொடுக்கப்பட்ட தலைப்புப் பொருளை ஏற்றும் எதிர்த்தும் பேசும் மேடைச் சொற்போர் நிகழ்ச்சி; a forum of opposing teams debating agiven

subject.

பட்டிமாடு பெ.(n.) கொண்டி மாடு; straying cattle.

பட்டுக்கரை

327

பட்டிமாறித் திரிதல் வி. (v.) ஊரூராய்த் திரிதல்; to go from place to place பட்டிமேய்தல் வி. (v.) I. கால்நடை

முதலியன பயிரை அழித்தல்; to stray into a field and damage crops as cattle or wild beasts. 2. கண்டபடி திரிதல்; to loiter about.

பட்டியல் பெ. (n.) விளத்தங்களை ஏதேனும் ஓர் அடிப்படையில் ஒன்றின் கீழ் ஒன்றாகத் தரும் வரிசை முறை; list; inventory. பட்டியெடுத்தல் வி. (v.) கொண்டித் தண்டம் வாங்குதல்; to collect poundage.

பட்டினி பெ. (n.) உணவு கொள்ளாமை; fating, abstinence, starvation. 'வேலை யில்லாமல் பலர் பட்டினி கிடப்பது உண்டு'.

பட்டினிகாத்தல் வி. (v.) சாவு வீட்டில் உண்ணாதிருத்தல்; to go with out food at a house of mourning.

பட்டினிச்சாவு பெ. (n.) உணவு கிடைக்காத தால் ஏற்படும் இறப்பு; death caused by starvation.

பட்டினிபொறுத்தல் பெ. (n.) பசியால் வருந்துதல்; to suffer from hunger. பட்டினிபோடுதல் பெ. (n.) உணவு உண்ணாதிருத்தல்; to abstain from food. இன்று பட்டினி போடு; நாளை வயிறு சரியாகிவிடும்'.

பட்டுக்கத்தரித்தல் வி. (v.) பிசிரின்றி வெட்டுதல்; cutting with out fray as in silk cloth.

பட்டுக்கருப்பட்டி பெ. (n.) ஒருவகைக் கருப்புக் கருப்பட்டி; a kind of black palmyra jaggery.

பட்டுக்கரை பெ. (n.) ஆடையில் பட்டா லியன்ற கரை; silk stripe or border in a cloth, opp.

to paluk ka-

k-karai.