பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

பண்பட்டவன்

பண்பட்டவன் பெ. (n.) கல்வியறிவும் பட்டறிவும் உள்ளவன்; educated and experienced man.

பண்பட்டுத்திரிதல் வி. (v.) ஊழியஞ் செய்து வருதல்; to attend courteously on one; to continue in a course of service. பண்படுதல் வி. (v.) I. சீர்திருந்துதல்; to become refined or reformed. 2. நிலம் முதலியன செப்பமாதல்; to be suitable for tillage, as land. 3. அமைதல்; to be obedicnt, submissive. 4. உதவுதல்; to help, save.

பண்படுத்துதல் பெ. (n.) பண்படுதல்

பார்க்க.

பண்பாடு பெ. (n.) திருந்திய ஒழுக்கம்; உள்ளத்தின் செம்மை; culture. பண்பாளர் பெ. (n.) நல்ல பண்பு களுள்ளவன்; person of good qualities. பண்பு பெ. (n.) 1. வண்ணம், வடிவு, அளவு, சுவையென்னும் நாற்குணம்; quality of four kinds, viz., vannam, vadivu, alavu, Rivai 2. இயல்பு; nature, property. 3. மனத்தன்மை; disposition, temper. 4. பிறரியல்பையறித்து நடக்கும் நற்குணம்; good quality courtesy. 5. அழகு:

beauty-

பண்புகாட்டுதல் வி. (v.) இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல்; to betray one's true nature.

பண்புடையார் பெ. (n.) பண்பாளர் பார்க்க.

பண அஞ்சல் பெ. (n.) (ஒருவர் மற்றொரு வருக்கு) பணத்தை அஞ்சல் அலுவலகத்தின் மூலமாகக்

கட்டணம் செலுத்தி அனுப்பும் முறை;

arange-ment for sending money to s.o. by paying the sum at a post office (in India) money order.

பணக்காரன் பெ. (n.) செல்வன்; rich man. பணக்காரி பெ. (n.) செல்வமுள்ளவன்; nich

woman.

பணக்கொழுப்பு பெ. (n.) செல்வச் செருக்கு; haughtyness due to wealth, insolence of wealth.

பணப்பயிர் பெ. (n.) தவசம் அல்லாத வருமானத்தை மிகுதியாகத் தரக்கூடிய கரும்பு, பருத்தி போன்ற பயிர்கன்; commercial crop; cash crop. பணப்பித்து பெ. (n.) பணப்பேராசை; greed of money, avarice,

பணப்பேய் பெ. (n.) பணத்தில் மிக்க ஆசை; extreme avarice.

பணம் பெ. (n.) 1. பொருட்செல்வம்; wealth. 2. பொற்காசு; coin, money, gold coin. 3. பழைய அளவை முறை கொண்ட வெள்ளி மற்றும் பொற்காசு வகை; fanam. 4. விலை;price. பணம்பண்ணுதல் பெ. (n) பணம் ஈட்டுதல்; make or earn money. பணம் பறித்தல் வி. (v.) பொருளைக் கவர்தல்; to extort money by dishonourable means.

பணம்வைத்தல் வி. (v.) I. பொருட் பந்தயம் வைத்தல்; to bet money, as in gambling. 2. திருமணம் முதலான திகழ்ச்சிகளில் அன்பளிப்பாகப் பணம் வழங்குதல்; to present money for the couple.

பணமடித்தல் பெ. (n.) மாழைகளிலும் தாளிலும் அரசு பணம் அச்சிட்டு வெளியிடுதல்; to mint coins and currency by the government. பணமிதப்பு பெ. (n.) செல்வ மிகுதியால்

செருக்கு; abundane of money.

பணமுட்டு பெ. (n.) I. பணமில்லாக் குறைவு: wat to mey. 2. பணத்துடன் கூடிய தட்டு; a plate with full of money.