பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணமுடக்கம் பெ. (n.) பணம் வட்டியின்றி வீணாகத் தங்குகை; money lying idle

without interest.

பணமுடிக்க பெ.(n) பணத்தைத் துணியில் கட்டிவைக்கும் முடிப்பு;mmey tied in a little piece of cloth or, at the end of a garment. பணமுடிப்பு Gu. (n.) (n.) ஒருவரைப் பாராட்டிச் சிறப்பிக்கும் முறையில் அல்லது ஒரு நோக்கத்துக்காகச் செலவிடும் பொருட்டுத் திரட்டி வழங்கப்படும் பெரும் தொகை; sum of money collected and given as a gift, purse.

பணமுடை பெ.(n) பணமில்லாக்குறைவு; want of money; need of finance. பணயக்கைதி பெ. (n.) தங்கள் கோரிக்கை களுக்கு இணங்கும்படி கடத்தல்

காரர்கள் முனைப்பாளர்கள் போன் றோர் எதிர்த்தரப்பினரை மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கத்துடன் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்; hostage; person head for ranson. பணயம் பெ. (n.) 1. ஈடாக வைக்கும் பொருள்; pledge, pawn. 2. பந்தயப் பொருஸ்;stakcin gambling.

பணவஞ்சல் டெ (n.) பணவிடை ஒருவர் மற்றொருவருக்குப் பணத்தை அஞ்சல் அலுவலகத்தின் மூலமாகக்கட்டணம் செலுத்தி அனுப்பும் முறை; money

order.

பணவீக்கம் பெ. (n.) ஒரு நாட்டில் பணப்புழக்கம் அதிகமாவதால் பணத்தின் மதிப்புக் குறைந்து அகவிலை அதிகமாகும் நிலை;

inflation.

பணம் வெட்டுதல் வி. (v) I. பொருளைப்

பிடுங்கிக் கொள்ளல்; to extort money by dishonourable means. 2. பணங் கொடுத்தல்; to give money for something. 3. கையூட்டுக் கொடுத்தவ்; to give bribe.

பணிப்பெண்

335

பணி பெ. (n.) 1, செயல்; act, action, performance.2. தொழில்; work service. 3.தொண்டு; services to a deity. 4.பணிகை; bowing, reverencing. 3. கடினமான வேலை: difficult task. 6. நுகர்ச்சிப்பொருள்; object of enjoyment. 7. அணிகலன்; jewe1; omament. 8. பட்டாடை; silk cloth. 9. தோற்கருவி; drum. 10. வேலைப் பாடு; workmanship. 11. வகுப்பு: row, class, order. 12. செயலை நிறை வேற்றும்படி ஆணையிடுதல், கட்டளையிடுதல்; to order, cause to carry out can orders.

பணிக்காரன் பெ. (n.) வேலையான்; servant.

பணிக்கொடை பெ. (n.) (பெரும்பாலும் அலுவலக வழக்கில்) குறிப்பிட்ட ஆண்டுகளுக்குக் குறையாமல் பணி புரிந்த ஊழியர் ஓய்வுபெறும் பொழுது அல்லது பணியில் இருக்கும்

காலத்தில் இறக்க நேரிடும் போது வரையறுக்கப் பட்ட முறைப் படி வழங்கப்படும் ஓய்வுக்காலச்சலுகை வகையைச் சேர்ந்த தொகை; gratuity. பணிதல் வி. (v.) I. தாழ்தல்; to be low in height, as a house. 2. பெருமிதமின்றி யடங்குதல்; to be humble; to be submissive, as in speech. 3. வணங்குதல்; to bow to, make obeisance. 4. ஆணை யிடுதல்; to order command, direct. 5.கொடுத்தல் ; to give bestow. பணிப்பூட்டு பெ.(n.) அணிகலக் கொக்கிப் பூட்டு; lock of a clasp in an omament. பணிப்பெண் பெ. (n.) I. மருத்துவமனை, தொழிற்சாலை போன்றவற்றில் சிறுசிறு வேலைகளைக் கவனிக்கும் கடைநிலைப்பெண் ஊழியர்; last grade woman worker. 2. பெரும்பாலும் அரண்மனையில் ஊழியம் செய்யும் பெண்; maid servents.