பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. விலங்கு முதலியன அடைக்குங் கூடு; cage for keeping animals. 4.எலி முதலியன பிடிக்கும் பொறி; trap for catching animals rats, etc.,

பத்திநெறி பெ. (n.) பத்தியால் வீடு பேறடையும் முறை; path of salvation through devotion.

பத்திபாய்தல் வி. (v.) I. ஒளி வீசுதல்; to stream out, as pencils of rays. 2. எதிரொளி செய்தல்; to bereflected. பத்தியக்கட்டுப்பாடு பெ. (n.) மருந்து சாப்பிடும்போது பத்தியத்தில் உணவுக் கட்டுப்பாடாக இருத்தல்;

restriction of diet.

பத்தியக்கறி பெ. (n.) பத்தியத்திற்குப் பயன்படும் காய்கனிகள்; vegetables

and fruits useful for those on diet.

பத்தியக்குற்றம் பெ. (n.) பத்தியக் குறைவினால் ஏற்படும் குற்றம்;

faults or disorders arising fron non - observance

of diet.

பத்தியக்குறைவு பெ. (n.) பத்திய முறைக்கு எதிராகப் பல பொருள்களையும் உண்ணல்; contrary to principles of diet. பத்தியங்காத்தல் வி. (v.) கொடுக்கப் பட்ட மருந்துக்கேற்ற மாற்று உணவெடுத்தல்; to observe a prescribed diet. பத்தியம் பெ. (n.) I. மருந்துக்கிசைந்த மாற்று உணவு; prescribed diet for a patient. 2. நலம்; that which is good or agreeable. 3. உன்னிப்பு; seriousness, eanestness, attention. 4. படிப்பணம்; subsistance allowance. 5. கையூட்டு;

bribe.

பத்தியம் பிடித்தல் வி. (v.) பத்தியமாக உண்ணுதல்; to be under prescribed diet. பத்தியம்போடுதல் வி. (v.) 1. பத்தியமாக

உணவு சமைத்தல்; to prepare a prescribed diet. 2. நோயாளிக்கு மருந்துக்கேற்ற உணவு கொடுத்தல்; to put a patient under diet. to diet one.

பதக்கம்

337

3. மகவு உயிர்த்தவளுக்கு மூன்றாம் நாள் பத்திய உணவு கொடுத்தல்; to give food to a woman inconfinement on the third day of the delivery. பத்தியமுறித்தல் வி. (v.) 1. மருந்துப் பத்தியத்தை முடித்தல்; to violate the dietary prescription. 2. குறித்த காலத்திற்கப்பால் பத்தியவுணவை நீக்கிக்கொள்ளுதல்; to take regular meals after completing the period of dietary regulation. பத்தியிறக்குதல் வி. (v.) தாழ்வாரம் இறக்குதல்;

tomake a sloping veranda -

roof.

பத்தும் பத்தாக து.வி (adv.) முழுமையாக; wholly, fully.

பத்தெட்டுக்குத்தல் பெ. (n.) நன்றாகக் குத்தித் தீட்டிய அரிசி; well cleaned rice. பத்தை பெ. (n) 1. கீற்று; slice. 2. சிறு துண்டு; thin piece, as of bamboo; slice of coconut. 3. மண்ணோடு கூடிய பசும் புல்துண்டு; turf. பத்தைகட்டுதல்

வி. (v.) முறிந்த எலும்புக்கு மூங்கிற்பத்தை வைத்துக் கட்டல்; bandaging with bamboo splint for broken or fractured bone. பத்தொடு எட்டுக்கொள்ளல் பெ. (n.) மூச்சுப் பழக்கத்தைக் குறிக்கும் பத்தொடு எட்டு சேர்த்தல்; adding eight to ten probably referring to the scientific breathing of yogis.

பதத்தல் வி. (v.) ஈரமாதல்; to become moist, soft, marshy.

பதக்கம் பெ. (n.) 1. மங்கல நாண் முதலியவற்றிற் கோக்கப்படும்

கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி; a pendant set with gems and suspended from the necklace. 2. உருவம் எழுத்து போன்றவை பொறிக்கப்பட்ட மதிப்புடைய மாழைப் பட்டை; medal.