பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதர் பெ. (n.) 1. உள்ளீடற்ற நெல்; chalf, husk, empty ears of grain. 2. பயனி ன்மை; unsubstantiality; emptiness; worthlessness. 3. பயனற்றவன்; worthless person. 4.குற்றம்; fault, defect. 5. அறிவிலி; stupid.

பதர்த்தல் வி. (v.) பதராய்ப்போதல்; to become useless.

2.

பதவி பெ. (n.) I. நிலை; position, rank. அதிகாரமுள்ள பொறுப்பு; பணியிடம்; post. 3. புண்ணிய உலகம்; etemal world. பதவி இறக்கம் பெ. (n.) ஒருவரை அவர் இருக்கும் பதவியைக் காட்டிலும் அதிகாரத்திலும் மதிப்பிலும் குறைந்த பதவிக்கு மாற்றுதல்;

demotion.

பதவி உயர்வு பெ. (n.) ஒருவர் இருக்கும் பதவிக்கு அடுத்த மேல்நிலைப் பதவி அளித்தல்; promotion.

பதவி நீக்கம் பெ. (n.) 1. பணிநீக்கம்; dismissal. அலுவலகப் பணத்தைக் கையாடல் செய்ததற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2. (குடி யாட்சி முறையில்) தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை அதிகாரம் இழக்கச் செய்தல்; dismissal of an elected government).

பதவியேற்பு பெ. (n.) அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நடுவர் முதலியோர் பதவி ஏற்கும்போது அதிகாரமுறைப்படி எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி; swearing in (ceremony).

பதவியேற்றல் வி. (v.) உறுதிமொழி கூறிப் பதவியை ஒப்புக்கொள்ளுதல்; be sworn in, take office.

பதற்றம் பெ. (n.) 1. முன்பின் திட்ட மின்றிப் பரபரப்புக் கொள்ளுதல்; rushness; hurry. 2. செயல்படுவதில் இயல்பு நிலை இழந்து காட்டும் பரபரப்பு; excitement. 3. அடுத்து என்ன

பதி

339

நடக்கும் என்று கூற முடியாத படி அச்சம் நிறைந்திருப்பது; tension. பதறிடல் பெ. (n.) 1. விரைதல்; being restless. 2. திடுக்கிடல்; being taken by surprise.

பதறியடித்துக்கொண்டு வி.அ. (adv.) கலக்கத்துடன் விரைவாக; in

disorderly haste (due to panic). பதறுதல் வி. (v.) 1. கலங்குதல்; to be fluried, confused agitated. 2. முன்பின் திட்டமின்றிப் பரபரப்புக் கொள் ளுதல்; to be impatient, over hasty; to

hurry. பதனபாண்டம் பெ. (n.) பக்குவமாக விழிப்போடு பாதுகாக்க வேண்டிய ஏனங்கள்; frail vessels (pots, bottles or articles) which are to be kept safely. பதனம் பெ. (n.) I. மிகுவிழிப்பு ;care, cause, attention circumspection. 2. பாதுகாப்பு; safety, security, protection. 3. இறக்கம்; descending, falling down. 4.தாழ்மை; humility. 5.அமைதி; mildness, gentleness. பதனழிதல் வி. (v.) பக்குவநிலை தவறுதல்;

to become over-ripe as fruit. பதனிட்டதோல் பெ. (n.) பதப்படுத்திய தோல்; tanned leather.

பதனிடுதல் வி. (v.) தோல் முதலிய வற்றைப் பயன்பாட்டுக்கு ஏதுவாகப் பக்குவப்படுத்தல்; to tan the leather for usage.

பதாகை பெ. (n.) 1.விருதுக்கொடி; ensign, banner, standard. 2. பெருங்கொடி;large

flag.

பதி பெ. (n.) I. பதிகை; penetration, transfixion, thrust. 2. நாற்று; sapling for transplantation. 3. உறைவிடம்; abode, residence. 4. வீடு; home, house. 5.கோயில்; temple. 6. குறி சொல்லு மிடம் ; an oracular shrine. 7. ஊர்; town,