பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

பதித்தல்

city, village. 8. நிலம்; the earth. 9. குதிரை; horse. 10. தாள்; day, time. பதித்தல் வி. (v.) 1. அழுத்துதல்; to imprint, impress, stamp engrave, as in mind, to plunge. 2. மணி முதலியன இழைத்தல்; to infix, insert, ingraft. 3. குழியாக்குதல்; to excavate, sink. 4. தாழ்த்துதல்; to lower height price, etc. 5. பதியம் போடுதல்; to plant a shoot, runner or creeper. 6. எழுதுதல்; to enter in aregister. 7. அதிகாரங்கொடுத்தல்; to invest with power, authority or prerogative.

பதிதல் வி. (v.) I. முத்திரை எழுத்தச்சு முதலியன அழுந்துதல்; to be inprinted, impressed, marked, stamped. 2. அதிகாரம் பெறுதல்; to be invested with power, authority. 3. பதிவேட்டில் எழுதுதல்; to register, enter in writing. 4. பாவுதல்; to pave, as floor. 5. பெயர் பட்டியலில் சேர்த்தல்; to take on the roll.

பதித்தெழுதுதல் வி. (v.) 1. அழுந்த எழுதுதல்; to write forming a deep impression. 2. மேலே இடம் விட்டுக் கீழேயெழுதுதல்; to wite in the lower half of a page leaving space at the top. பதிப்பகம் பெ. (n.) பொத்தகம் முதலிய வற்றை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம்; publishing house.

பதிப்பாசிரியர் பெ. (n.) பிறரின் கட்டுரை களையோ நூலையோ தொகுத்து அல்லது முறைப்படுத்தித் தரும் பொறுப்பை ஏற்பவர்; editor (of a work).

பதிப்பாளர் பெ. (n.) பொத்தகம் முதலிய வற்றை வெளியிடும் பணியைச் செய்பவர்; publisher.

பதிப்பித்தல் வி. (v.) பொத்தகம் முதலிய வற்றை ஒழுங்குபடுத்தி அச்சிட்டு

வெளிவிடுதல்; edit (a book, etc.,); publish.

பதிப்பு பெ. (n.) I. பதிய அழுத்துகை; imprinting, indentation. 2. நூல் அச்சிடுகை; editing, printing, as a work. 3. அச்சிடப்பட்ட நூல்; that which is

edited.

பதிப்புரிமை பெ. (n.) பொத்தகம், திரைப் படம் முதலியவற்றின் பயன்பாடு, வெளியீடு முதலியவற்றை உருவாக் கியவர் ஒப்புதல் இல்லாமல் மற்றொருவர் பயன்படுத்த முடியாத வகையில் அளிக்கப்படும் காப் புரிமை; copy right.

பதிப்பெயர்தல் வி. (v.) விட்டு நீங்குதல்; to relinquish.

பதிபோடுதல் வி. (v.) 1. தாற்றுதடுதல்; to transplant. 2. பதியம் போடுதல்; to plant, as slips. to insert, as grafts. 3. பதுங்குதல் ; to crouch.

பதியம் பெ. (n.) 1. தாற்று ; sapling or cluster of saplings planted, layer, grafting or runner inserted. 2. நாற்று முடியை இரண்டொரு நாட்களுக்குச் சேற்றில் பதித்து வைக்கை; temporary planting of a cluster or saplings in mud. 4.இலைப்பாசி; species of duckweed. 5.ஊன்றி நடுஞ்செடி; கொடி, கிளை முதலியன; slip, shoot, graft.

பதியம் போடுதல் வி. (v.) மல்லிகை, பனிநீர்ப்பூ அல்லது முள்ளலரி முதலிய செடியின் கிளையை வளைத்து மண்ணில் புதைத்து அந்தக் கிளை, வேர்விட்ட பின் முதல் செடியிலிருந்து வெட்டி விடுதல்; graft a plant. பதிவாக மூடுதல் வி. (V.) வெளிக்காற்றுப் புகாதபடியும் உள்ளாவி வெளியே போகாதபடியும் பொருத்தமாக மூடுதல்; covering with a vessel closely so that air may not enter into vapour cannot escape out through the opening between the lids.