பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிவாளர் பெ. (n.) 1. சிலஅரசுத்துறைகளில் குறிப்பிட்ட விளத்தங்களை அதிகார முறைப்படி ஆவணங்களில் பதிவு செய்வதற்கு உரிய பொறுப்பில் உள்ள அதிகாரி; official responsible for registering and maintaining records as relating to land records, births and deaths, etc., registrar. 2. (உயர்கல்வி நிறுவனங்களில்) கல்விப்பணி

அல்லாத ஆள்வினைப் பொறுப்பு களுக்கு உரிய உயர் அதிகாரி; registrar (of a University, etc.,)

பதிவு பெ. (n.) I. அழுத்துகை; impression, identation. 2. பள்ளம்; lowness of a surface, depression. 3. பதுக்கம்; stooping, crouching, lurking, as a thief or a beast ready to spring on its pray; ambush. 4. நிலவரம்; pemanence. 5. தீர்மானிக்கப்பட்ட செலவு; allotment, as in a budjet. 6. வழக்கம்; custom, habit. 7. கணக்குப் பதிகை; registering, entering, as in account. 8. பதியப்பட்டது; registry, entry. 9. அமைதி; submission obedience, humility. 10. பதியம்; sapling, layer of a plant.

பதிவு அஞ்சல் பெ. (n.) முகவரியில் உள்ளவருக்குச் சேர்ப்பிக்கப்படும் என்பதை உறுதி செய்வதற்காகக் கூடுதல் கட்டணம் செலுத்திச் சான்று பெற்று அனுப்பும் அஞ்சல்; registered

post.

பதிவேடு பெ. (n.) அலுவலகங்களில் நடவடிக்கைகளை முறையாக எழுதி வைக்கும் சுவடி; register (as in an office).

பதிவுவைத்தல் வி. (v.) 1. கணக்கிற் பதிதல்; to enter in an account. 2.வாடிக்கை வைத்தல்; to become a customer of a shop..

பரிசம் பெ. (n.) மணமகள் வீட்டார்

மணமகன் வீட்டாருக்கு அளிக்கும் பொருட்கொடை; dowry.

பல்காலும்

341

பரிசு பெ. (n.) 1. அன்பளிப்பு; gift. 2. வெற்றி பெற்றதற்கான பணம் அல்லது பொருள்; prize, award.

பரிசுச்சீட்டு பெ. (n.) குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துப் பணம் பரிசாகத் தருவதற்கு விற்கப்படும் வரிசை எண் அச்சிட்ட தாள்; lottery ticket.

பரிதவிப்பு பெ. (n.) வருத்தத்துடன் கூடிய தவிப்பு ; suffering; despair. பரிந்துபேசுதல் வி. (v.) ஒருவருக்குச் சார்பாகப் பேசுதல்; to plead intercede, vindicate advocate ones.

பரிமாற்றம் பெ. (n.) மாற்றிக் கொள்ளுகை; exchanging inter changing.

பரிமாறுதல் வி. (v.) உணவு படைத்தல்;to distribute, serve as food to guests. பரிவட்டம் பெ. (n.) கோயில் மதிப்புரவாக வணங்குவோர் தலையைச் சுற்றிக் கட்டும் கடவுளாடை; vestment of a deity tied round the head of its devotee as a mark of honour.

பரிவாரம் பெ. (n.) உடன் வரும் கூட்டம்; retinue, attendants followers.

பருக்கை பெ. (n.) உதிரியான சோற்றில் ஒன்று;a grain of cooked rice.

பருகுதல் வி. (v.) குடித்தல்; to drink.

பருத்தல் வி. (v.) பெருத்தல்; to become, large, bulky.

பருமன் பெ. (n.) (ஒருவரின் உடலைக் குறிக்கையில்) சரிக்குச் சரியைவிடச் சதைப்பற்று மிகுந்த நிலை; (of ones body) bulkiness, plumpness.

பருவகாலம் பெ. (n.) ஏற்றகாலம்; proper

season.

பருவமழை பெ. (n.) உரிய காலத்திற் பெய்யும் மழை; seasonal rain. பல்காலும் வி.அ. (adv.) பல சமையம். அடிக்கடி; manytimes, frequently.