பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

பல்முளைத்தல்

பல்முளைத்தல் பெ. (n.) கடைவாய்ப்பல் முளைக்கை; cutting of the wisdom tooth.

பல்லக்கு பெ. (n.) ஆட்கள் தூக்கிச் செல்லும் ஊர்திவகை; palanquin. பல்லாங்குழி பெ. (n.) நெற்குத்தும் பண்ணை போல் எதிரெதிர் வரிசையில் 14 வட்டமான பன்னம் அல்லது குழிதோண்டி அதில் சிறு கற்களையிட்டு ஆடும் ஆட்டம்; 14 hollows used in a particular kind of game.

பல்லாண்டு பெ. (n.) பல ஆண்டு; many years.

பல்லிகொட்டுதல் பெ. (n.) பல்லி ஒலி எழுப்புதல்; chiping of a lizard. பல்லியாடு பெ. (n.) வலுவில்லாத ஆடு; goat without strength.

பல்லிளித்தல் வி. (v.) I. பல்லை வெளிக் காட்டுதல்; to grim, show the teeth. 2. புடவை சாயம் போதல்; to lose colour, as a saree.

பல்லுக்கட்டுதல் வி. (v) செயற்கைப்பல் வைத்தல்; to insert artificial teeth. பல்லுக்காட்டுதல் வி. (v.) வெளிப்படச் சிரித்தல்; to laugh out right.

பல்லுக்குச்சி பெ. (n.) பல் துலக்க உதவுங்குச்சி; small twig used as a brush

to clean the teeth. பல்லுக்குத்துதல் வி. (V.) பல்லிடுக்கிற் சிக்கிய பொருளைக் குத்தி யெடுத்தல்; to remove the food particles settled in between the gap of teeth by tooth pick.

பல்லுப்படுதல் பெ. (n.) கால்நடைக்குக்

கடைவாய்ப்பல்

முளைக்கை;

sprouting of molar tooth in cattle. பல்லைக்கடி-த்தல் வி. (V) சினம் முதலிய

வற்றால் பல்லை நெரு நெருத்தல்; to grind the teeth, gnash the teeth, as in anger.

பலகணி பெ. (n.) சாளரம்; lattice window.

பலசரக்கு பெ. (n.) பலவகைப் பண்டம்; groceries, goods of various kinds food stuffs.

பலதரப்பட்ட பெ.அ. (adj.) பலவகையான; of all sarts; different kinds of. பலிகடா பெ. (n.) பழி, தண்டனை போன்றவற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக தண்டிக்கப்படும் மற்றொருவர்; scape

goat.

ஒருவர்

பலுகுக்கட்டை பெ. (n.) வயலில் மண் கட்டிகளை உடைத்துச் சமப்பரப் பாக்குவதற்கான பல கொழுத்தட்டு; harrow.

பவளவிழா பெ.(n.) எழுபத்தைந்தாம் ஆண்டின் நிறைவை ஒட்டிக் கொண் டாடப்படும் விழா; celebration marking the completion of 75th year (in India) Platinum Jubilee.

பழக்கம் பெ. (n.) 1. பயிற்சி; training, exercise, use. 2, வழக்கம்; habit, practice,

custom.

பழங்கணக்கு பெ. (n.) சென்று கழிந்த செய்தி; something obsolete.

பழங்கதை பெ (n.) முன் வரலாறு; story of ancient time.

பழங்கந்தை பெ. (n.) கிழிந்த துணி; wom out rags, tatters.

பழசு பெ. (n.) நாட்பட்டது; that which is old or damaged by time. பழஞ்சோறு பெ. (n.) பழைய சோறு; boiled rice preserved in water and kept overnight.

பழந்தண்ணீர் பெ. (n.) சோற்று நீர்

(நீராகாரம்); water allowed to stand ovemight on cooked rice.

பழம்பகை பெ. (n.) நெடுங்காலப் பகைமை; inveterate enmity. பழம்பஞ்சாங்கம் பெ. (n.) 2. பழங்கதை; old tale. 2. பழைமை விரும்பி; பிற்போக்காளர்; conservator.