பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதற்காக அத்த சொற்றொடரின் பயனிலையுடன் சேர்க்கப்படும் இடைச்சொல்; particle added to the predicate of a sentence to indicate that the information conveyed in the sentence is only reported or inferred. 'இவள் அவரோட தங்கச்சியாம்'. 2. ஒரு கூற்றின் உண்மையை ஏற்பதில் ஒருவருக்கு உள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக ஒரு சொற் றொடரின் பயனிலையோடு சேர்க்கப் படும் பயனிலையோடு சேர்க்கப் படும் இடைச் சொல்; particle used for ridiculing a statement. 'குடிசை போலிருக்கும் கட்டிடம். இது பள்ளிக்கூடமாம்'. 3. எண்ணுப் பெயர்களோடு இணைக்கப்படும் போது ஒன்று ஒரு வரிசையில் அமைத் திருக்கும் நிலையைக் காட்டுவதற்குக் குறிப்பிட்ட சொல்லோடு சேர்ந்து மற்றொரு சொல்லை உருவாக்கும் இடைச்சொல்; particle forming ordinal numbers. எட்டாம் தேதி. 4. கேள்விக்கு உடன்பாட்டைத் தெரிவிக்கும்போது பயன்படுத்தும் இடைச்சொல்; particle expressing affirmative response to a question; 'yes' இது உன் தம்பியா? 'ஆம்' என்தம்பி தான். ஆம்படையான் (அகமுடையான்) ; husband. ஆமணக்கு பெ. (n.) விளக்கெண்ணெய் எடுக்கப் பயன்படும் கரும் பழுப்பு நிற விதை. இவ்விதையைத் தரும் ஐந்து பிரிவாகப் பிரிந்த இலைகளை யுடையச் செடி; castor seed, plant giving these seeds. Gu. (n.) கணவன் ஆமவடை பெ. (n.) கடலை பருப்புடன் உசிலை (மசாலை) சேர்த்து உரலிலிட்டு ஆட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கும் வடை; Vadai prepared out of bengal gram mixed with other spices and fried in oil. ஆமாம் இ.சொ. (int.) ஆம்* 4 பார்க்க. ஆய்வடங்கல் 27 ஆமாம்சாமி பெ. (பே.வ.) (n.) உயர் பதவியில் அல்லது குமுகத்தில் உயர் நிலையில் இருப்பவரை (தன்னலத் துக்காக) மகிழ்விக்கும் வகையில் அவர் சொல்வதற்கெல்லாம் உடன் படுபவர்; 'yes man' ஆய்தப் பயிற்சி பெ. (n.) I. படைத்துறைப் பயிற்சி; military exercise. 2. சிலம்பம் முதலியவற்றின் பயிற்சி; practice in the art of fencing etc., ஆய்தபூசை பெ. (n.) படைகலப் பூசை. கன்னித் (புரட்டாசி) திங்கள் வளர் பிறை முதனால் முதற்கொண்டு அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முத்தேவியரையும் மும்மூன்று நாளாக ஒன்பது நாள்வரை படைக் கலங்களும், புத்தகங்களும் படைத் துச் செய்யும் பூசை; கருவிப்பூசை; worship of weapons, tools, books, etc., on the nineth day of Navarathri. ஆய்தல் வி. (v.) 1. ஆராய்தல், தேடுதல்; to search, examine, investigate. 2.சிந்தித்தல்; to consider. 3. தெரிந் தெடுத்தல்; to select, seckout. கீரையை ஆய்ந்தாள். 4. பிரித் தெடுத்தல்; to separate. ஆய்ந்த கீரை பெ. (n.) காம்பு களைந்த கீரை; leaves from which the stems or the pedicles are nipped off. ஆய்வகம் பெ. (பெ.வ.) (n.) ஆய்வு செய்யும் இடம்; laboratory in a hospital, factory, school, etc., அறுவை செய்து எடுத்த கட்டியை ஆய்வகத்திற்கு அனுப்பி யுள்ளனர். ஆய்வடங்கல் பெ. (பெ.வ.) (n.) ஒரு குறிப்பிட்ட பொருளின் அடிப் படையில் ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை வரிசைப்படுத்தித் தரும் அட்டவணை (பட்டியல்); biblio- graphy. 'செயகாந்தன் ஆய்வடங்கல்'.