பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

பளுதூக்கி

பளுதூக்கி பெ. (n.) தடித்த கம்பிகளைப் பயன்படுத்திக் கனமான பொருள் களைத் தூக்கும் ஒருவகைப் பொறி;

crane.

பற்கட்டுதல் பெ. (n.) விழுந்த பற்களுக்குப் பகரமாகச் செயற்கைப் பற்கள் கட்டுதல்; setting of artificial

teeth.

பற்குச்சி பெ. (n.) பல் விளக்கும் சிறு தும்பு; fibrous stick used as a tooth brush.

பற்சொத்தை பெ. (n.) பல்லில் பூச்சியரிக்கும் நோய்; caries of the

teeth.

பற்பசை பெ. (n.) பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் வேதிப்பொருள் களால் செய்யப்பட்ட வழுவழுப்புத் தன்மை உடைய பசைப்பொருள்; tooth paste. பற்றடைப்பு பெ. (n.) வேளாண்மைக்காக நிலத்தைக் குடிகளிடம் குத்தகை; lease for cultivation. பற்றவைத்தல் வி. (v.) I. நெருப்பு மூட்டுதல்; to kindle as fire. 2. பகை விளைத்தல்; to make enemies, to sow

discord.

விடுங்

பற்றாக்குறை பெ. (n) தேவைக்கும் குறைவாக உள்ள நிலை; scarcity, shartage.

பற்றியிழுத்தல் வி. (v) மூச்சு வாங்குதல்; to take hard breaths when dying.

பற்றியெரிதல் வி. (v.) 1. தீ மூண்டெரிதல்; to catch fire. 2. சினம் மூளுதல்; to get enraged, to become angry. பற்று பெ. (n.) 1. உலக வாழ்க்கை மீது ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு; attachment, bondage. 2. திருப்பித்தர

வேண்டிய

பணத்தைப் பற்றிய

விளக்கக் குறிப்பு; debit particulars. பற்றுக்குறடு பெ. (n.) கம்மக்கருவி வகை; tongs, black smiths pincers. பற்றுச்சீட்டு பெ. (n.) I. ஒப்புதல் சீட்டு; receipt. 2. வேளாண்மைக் குத்தகை ஆவணம்; lease deed of cultivation. பற்றுதல் வி. (v.) I. ஆடு, மாடு முதலிய வற்றை ஓர் இடத்திலிருந்து போகும் படி ஓட்டுதல்; விரட்டுதல்; chaseaway (stray cattle). 2. போ, வா என்னும் வினையோடுகூட்டிப் போதல்; கூட்டி வருதல்; take or lead the cattle to some place. 3. நோய் முதலியன தொற்றுதல்; catch, infect.

பற்றுவரவு பெ. (n.) கணக்கின் வரவு செலவுக் குறிப்பு; debit and credit. பறக்கும்படை பெ. (n.) உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதற்காக அணிய நிலையில் இருக்கும் ஆய்வாளர்; flying squard. பறட்டைத்தலை பெ. (n.) தூறடர்த்த மயிர்த்தலை; head with shaggy untidy

hair.

பறண்டுதல் வி (v.) உகிர் முதலிய வற்றால் சுரண்டுதல்; to scratch, as with nails. பறபறத்தல் வி. (v.) மிக விரைதல் ; to

hasten, hurry.

பறவாதி பெ. (n.) பேராசைக்காரன்; greedy

man.

பறிகொடுத்தல் வி. (v.) 1. களவு கொடுத்தல்; to be robbed of. 2. சாகக் கொடுத்தல்; to lose, as children.

பறிபோடுதல் வி. (v.) மீன் பிடிக்கப் பறி வைத்தல்; to set the pari in water for fishing.

பறிமுதல்செய்தல் வி. (v.) அரசு சட்ட முரணாக வைத்திருப்பதை அல்லது சட்ட நடவடிக்கையாக ஒன்றைக் கைப்பற்றுதல்; confiscate.