பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

பாக்குவைத்தல்

பாக்குலைத்தல் வி. (v.) தெருங்கிய உறவினர்களாகிய மாமள், மைத்துனன் போன்றவர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்துத் திருமணத்திற்கு அழைத்தல்; to invite close relatives persons to a wedding, presenting areca nut and betel. பாகப்பிரிவினை பெ. (n.) உரிமை யாளர்கள் தங்கள் பொதுவான சொத்தைப் பிரித்துக் கொள்ளும் முறை; partition (of jointly owened property). பாகபடை பெ. (n.) வினைச்சலுக்குத் தக்கவாறு தீர்வையைத் தவசமாகத் தண்டல் செய்யும் முறை; a system of land revenue in which a fixed share of the produce is collected. பாகம் பெ. (n.) 1. பகுதி, உறுப்பு: prt. 2. (சொத்தில்) உரிமைப் பங்கு; share (in a property). 3. (நூலின்) தொகுதி; volume (of a novel, etc.,). 4. நடிப்புப் பகுதி, புனைவு; role, part. 5. இடம்; place, sport, region.

பாகம் பகிர்தல் வி. (v.) உறவினர் களுக்கிடையில் சொத்துக்களைப் பிரித்து எடுத்துக்கொள்ளுதல்; to divide an estate, as a kinsman. பாகம்போடுதல் வி. (v.) கைப் பாகத்தால் அளவிடுதல்; to measure by the arm. பாகன் பெ. (n.) 1. யானையைத் தன் கட்டளைப்படி செயல்பட பழக்கி வைத்திருப்பவர்; mahout. 2. (முற் காலத்தில்) தேர் ஓட்டுபவன்; (சாரதி); (in former times) charioteer. பாகு பெ. (n.) காய்ச்சிய கரும்புச்சாறு, பததீர், சருக்கரை அல்லது வெல்லக் கரைசல்; treacle; molasses; sugar syrup. "வெல்லப் பாகில் தோய்த்துச் செய்த பண்டம்'.

பாகுபடுத்துதல் வி. (v.) வேறுபாடு

தெரியும் வகையில் பிரித்தல்; classify, sort out, defferentiate.

பாகுபாடு பெ. () I. பிரிவுபடுகை; division, sub division, class. 2. வேற்றுமை;

difference, classification.

பாகை பெ. (n.) கோணத்தை அனக்கப் பயன்படும் அலகு. வட்டத்தின் 300 சமபாகத்தில் ஒரு பாகம்; degree (to measure angles).

பாகைமானி பெ. (n.) பாகைகள் குறிக்கப்பட்டு அரைவட்ட வடிவில் இருக்கும் கருவி; protractor.

பாங்கு பெ. (n.) 1. (செயலைச் செய்யும்)

முறை; way; manner (of doing something), 2. பக்குவம்: தயம்; grace; tact. 3. (முன் குறிப்பிடப்படும்) தன்மை நிறைத்தது; being ofthenature specified.

பாச்சாங்குள்ளி பெ. (n.) விளையாட்டில்

முறையின்றி தருக்கஞ் செய்பவள் ள்: one who makes unjust claims in a game. பாச்சி பெ. (n.) 1. தாய்ப்பால்; milk, mother's milk. 2. அலைவாய்க்கரை தோக்கி வரும் இருவேறு அவை களுக்கு இடையே உள்ள நீர்பரப்பு; water surface between two sea tides.

பாசக்கட்டு பெ. (n.) பிறப்பிற்குக் காரணியமான (காரணமான) உயிர்த் தொடர்பு: the bondage of the soul resulting in births. பாசக்கயிறு பெ. (n.) கூற்றுவனின்கையில் வைத்திருப்பதாகக் கூறப்படும்

சுருக்குக் கயிறு; the so called rope with. a noose in the hands of yaman the god of death.

பாசம் பெ. (n.) 1. குருதி (அரத்த} தொடர்புடைய உறவினருக்கிடையே ஏற்படும் இயற்கையான பிணைப்பு: அன்பு; affection, attachment. . 2. பற்று; attachment; attachment.