பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

பாட்டுடைத்தலைவன்

song; poem. 4. வசை, திட்டு; shower of abuse, lengthy scolding. பாட்டுடைத்தலைவன்

பெ.

(n.)

இலக்கியத்தலைவன்; hero of a poem. பாட்டுப்படித்தல் வி. (v.) 1. இசைப் பாட்டுப் பாடுதல்; to sing. 2. செய்யு ளியற்றுதல்; to compose verses.

பாடக்குறிப்பு பெ. (n.) ஆசிரியர், வகுப்பில் மாணாக்கர்க்குப் பாடங் கற்பிக்க முறைப்படுத்தி எழுதி அமைத்துக் கொள்ளும் குறிப்புகள்; notes of

lesson.

பாடகன் பெ. (n.) பாடுவதைத் தொழி

லாகக் கொண்டவன்; male singer. பாடசாலை பெ. (n.) கல்விக்கூடம்; school or college for learning. 'இரவுப் பாடசாலை.

பாடஞ்சொல்(லு)தல் வி (v.) 1. கற்பித்தல்; to explain lessons; to teach. 2. பாடம் ஒப்பித்தல்; to recite lessons. பாடத்திட்டக்குழு பெ. (n.) பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் பாடத்திட்டத்தை உருவாக்கும் அறிஞர் குழு; expert committee for syllabus. பாடத்திட்டம் பெ. (n.) கல்வி நிறுவனங் களில் குறிப்பிட்ட துறைப் படிப்பைப் பயிற்றுவிக்கும் நோக் கத்தில் கற்பிக்கப்பட வேண்டியவை. அதற்கு உரிய நூல்கள் முதலியவற்றை உரியவர்கள் முடிவு செய்து வகுக்கும் திட்டம் ; syllabus or curriculam for a

course.

பாடநூல் பெ. (n.) மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட புத்தகம்; text book.

பாடம் பெ. (n.) I. சுமைவைத்து அழுத்துகை; compression, as of a heap of tobacco, olais or skins by a weight

placed on it. 2. பதப்படுத்துகை; tanning. 3. ஒன்பான்மணி முதலிய வற்றின் ஒளி; as leather, curing; as tobacco lustre of precious stones and metals. 4. முடி மாலை; a garland for the head chaplet.5. (மாந்த உடல் விலங்கின் தோல், புகையிலை முலியவை) கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும் படி மேற்கொள்ளப்படும் முறை; (of body) embalming (of leather tobacco, etc.,) tanning, curing, etc.,). 6. மாணவர் பயிலும் பாடக்குறிப்பு;

lesson.

பாடம் எடுத்தல் வி. (v.) (கல்விக் கூடத்தில்) பாடத்தை விளக்கிச் சொல்வதன் மூலம் கற்பித்தல்;பாடம் நடத்துதல்; take a class in an educational institution).

பாடம் கற்பித்தல் வி. (v.) (தவறாகவோ முறையற்ற வகையிலோ நடந்து கொள்பவருக்கு ஒன்று அல்லது ஒருவர்) படிப்பினையைத் தருதல்; to

teach someone a lesson.

பாடம் கற்றுக்கொள்ளுதல் வி. (v.) (ஒரு நிகழ்விலிருந்தோ செயலிலிருந்தோ ஒரு படிப்பினையைப் பெறுதல்; leam one's lesson.

பாடம் புகட்டுதல் வி. (v.) பாடம் கற்பித்தல்; to teach a lesson. பாடல் பெ. (n.) 1.பாடுகை; singing;

verisifying. 2. இசைப்பா; song, lyric. 3. செய்யுள்; poem, poetry. 4. புகழ்; fame, renown.5. படிக்கை; reading. பாடவேளை பெ. (n.) பள்ளிகளில் பாடப் பிரிவினை செய்து நடத்தும் காலக்கூறு; period. பாடவேறுபாடு பெ. (n.) ஒரு நூலின் எழுத்து, சொல், தொடர் முதலியவை அதன்பல படிகளில் வெவ்வேறாகக் காணப்படும் நிலை; variant reading of

a text.