பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிக்கொடுத்தல் வி. (v.) 1. பிறனுக்காகச் செய்யுள் இயற்றித்தருதல்; to compose a poem and give it to another. 2.பாடலியற்றுதல்; to compose a poem. பாடிகாப்பார் பெ. (n.) ஊர்க்காவலர்; village watchmen;

those - responsible for the safety of property in a village. பாடிபரதேசி பெ. (n.) I. பாடிக்கொண்டு அலைந்து திரிபவன்; wandering ballad singer. 2. ஊருராய்த் திரியும் இரவலன்; wandering beggar. பாடுதல் வி. (v.) I. (பாடலை) இசை யோடு குரல் மூலம் வெளிப்படுத் துதல்; sing. 2. (பா, செய்யுள் போன்றவை) படைத்தல்; எழுதுதல்; compose a poem or verse.

பாடு பெ. (n.) 1. பொறுப்பு; (one's) responsibility; business. 2. நிலைமை; (one's) lot; condition. 3. (LOLD IT GOT) வாழ்க்கை; one's lot in life.

பாடுகிடத்தல் வி. (v.) ஓர் இடத்தில் இருந்தபடியே கடுமையாகப் பாடு படுதல்; work hard. 'இந்த நாலு மூட்டை நெல்லை வீட்டுக்குச் கொண்டுவரப் பாடு கிடக்க வேண்டியிருக்கிறது.

பாடுபடுதல் வி. (v.) I. (உடலை வருத்தி உழைத்தல்; toil; work hard; take pains. நாட்டின் விடுதலைக்காகப் பாடு பட்ட தலைவர்கள்'. 2. (மனம்) துன்பமடைதல்; துடித்தல்; be pained. பாடுபொருள் பெ. (n.) கருவாக அமையும் பொருள்; subject matter (of a poem, etc.,) சமுதாய அவலங்களே இவர் கவிதையின் பாடுபொருள். பாடை பெ. (n.) 1. பருத்தி ; cotton. 2.பிணத்தைத் தூக்கும் பாடை மரம், அதாவது பிணக்கட்டில்;bier. பாடை கட்டுதல் வி. (v.) பாடை அமைத்தல்; make the funeral bier. இழவு வீட்டுக்கு முன்னால் இரண்டு

பாதகாணிக்கை

349

பாடை கட்டிக் கொண்

பேர் டிருந்தனர்.

பாணம் பெ. (n.) அம்பு; arrow. 'அவர் என் மேல் தன் கடைசி பாணத்தைத் தொடுத்தார்.

பாணன் பெ. (n.) (முற்காலத்தில்) யாழ் முதலிய இசைக்கருவிகளை இசைத் துப் பாடும் கலைஞர்; ministrel of ancient times using stringed instruments. பாணி பெ. (n.) 1. இசைப்பாட்டு ; song, melody. 2. இசை; music. 3. ஒலி ; sound. 4. அழகு ; beauty. 5. கூத்து; dramatic entertainment with dancing. 6. காலம்; time, occasion.

பாத்தி பெ. (n.) பாய்ச்சும் நீர் தேங்கி யிருப்பதற்காகச் சிறு வரப்புகளால் பிரித்த அமைப்பு; garden plot; bed; (salt) pan. கீரைப் பாத்தி / உப்புப் பாத்தி'.

பாத்திகட்டுதல் வி. (v.) கீரை விதை

முதலியன தெளிக்க வரப்பு கட்டுதல் ; to back up or make garden beds, salt pans,

etc.,

பாத்தியம் பெ. (n.) உரிமை; right of possession, claim. 'கணவன் இறந்து விட்டால் அவனுக்குரிய குடும்பச் சொத்துக்களில் மனைவிக்குப் பாத்தியம் உண்டு' பாதக்காப்பு பெ. (n.) காலணி; chappals. பாதக்குறடு பெ. (n.) துறவியரால்

(அணியப்படுவதும்) முதல் இரு கால் விரல்களின் இடைவெளியில் நுழைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு கட்டையால் செய்த குமிழுடையது LDIT GOT STOUGf;

wooden sandals with a toe - grip.

பாதகாணிக்கை பெ. (n.) ஆசிரியர், திருமடத்தலைவர் (மடாதிபதி) போன்றோரைப் பார்க்கச் செல்