பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

பாதச்சிலை

பவர்கள் மரியாதைக்காக அளிக்கும் காணிக்கை; offering made to a teacher or head of a math by a visitor by way of respect.

பெரியோர்,

பாதச்சிலை பெ. (n.) தூணைத் தாங்கும் அடிக்கல்; base stone of a pillar. பாதசாரி பெ. (n.) (சாலையில்) நடந்து செல்பவர்; pedestrian. பாதபூசை பெ. (n.) பெற்றோர் முதலியோரின் பாதங் களைத் தூய்மை செய்து மலர் வைத்து வணங்கும் சடங்கு; the ritual of washing the feet (of the teacher, saint or of one's parents out of respect).

பாதம் பெ. (n.) I. (கணுக்காலுக்குக் கீழே உள்ள) காலின் கீழ்ப்பகுதி; foot. 2.உள்ளங்கால்; sole (of the foot). 3. கால் போன்ற பகுதி; arest fastened to certain household vessels, implements, etc.,

பாதயாத்திரை பெ. (n.) வேண்டுதலை முன்னிட்டுக் கோயில்களுக்கு அல்லது குறிப்பிட்ட நோக்கத்துடன் ஓர் இடத்திற்கு நடந்தே செல்லுகை; pilgrimage on foot (undertaken in fulfilment of a vow; march). 2.தடைபயணம்; march. பாதி பெ. (n.) 1. இரண்டு சமமாகப் பகுக்கப்பட்ட பொருட்பகுதி; half, moiety. 2. நடு; middle. 3. பகுக்கை; dividing, sharing. 4. துண்டு; apiece. பாதிராத்திரி பெ. (n.) நள்ளிரவு; midnight. பாதிப்பு பெ. (n.) I. இயல்பானதன்மைக்கு ஏற்படும் கேடு; damage; suffering. 'வெள்ளத்தால் பாதிப்பு. 2. தாக்கம்; impact; influence.

பாதுகாத்தல் வி. (v.) I. தீங்கு, அழிவு முதலியவை நேராமல் காப்பாற்றுதல்; காத்தல்; protect. 2. குடும்பம் முதலியவற்றை அல்லது கலைகளைப்

பேணுதல்; பராமரித்தல்; provide for (a family); support; preserve (arts). பாதுகாப்பாளர் பெ. (n.) பாதுகாக்கும் பணி செய்பவர்; பாதுகாவலர்; guard (employed to protect a place, person). பாதுகாப்பு பெ. (n.) 1. தீங்கு, அழிவு, நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு ; protection, defence; security. 2. (ஒருவர் உணரும்) காப் பான நிலை; security; safety. பாதுகாப்புப் பெட்டகம் பெ. (n.) வைப்பகம் போன்றவற்றில் விலை உயர்ந்த பொருள்களை வைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும்

பாது

காப்பான முறையில் உள்ள பெட்டி போன்ற அமைப்பு; safety locker (in a bank, etc.,).

பாதை பெ. (n.) (ஓர் இடத்துக்கு) செல்வதற்கு உரிய வழி; way; path. பாந்தம் பெ. (n.) பொருத்தம், இணக்கம்; something seemly or proper. 'உன் வயதுக்கு இப்படிப் பிடிவாதமாக இருப்பது எனக்குப் பாந்தமாகப் படவில்லை.

பாந்து பெ. (n.) I.பொத்து; cavity, hollow, deep hole. 2. வளைவுக்கும் சுவருக்கும் இடையிலுள்ள பாகம்; spandrel. 3. சுவர்க் கற்களின் இடையிலுள்ள சந்து; interstices between bricks in a wall. பாப்பா பெ. (n.) 1. சிறு குழந்தை; little child. 2. பாவை; doll. 3. கண்ணின் கருவிழி; iris of the eye.

பாம்படம் பெ. (n.) பெண்கள் அணியும் ஒருவகைக் காதணி; a heavy omament, for the ears (worn by rural woman). கிராமங்களில் கூடப் பாம்படம் அணிவது தற்போது குறைந்து வருகிறது.

பாம்பணை பெ. (n.) திருமாலின் பாம்புப் படுக்கை;

serpent bed of Thirumal - பாம்பாட்டி பெ. (n.) I. பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவன்;

snake - charmer. 2.வரிக்கூத்துவகை; a kind of dance. பாம்பாட்டுதல் வி. (v.) பாம்பைப் படமெடுத்தாடச் செய்தல்; to make a cobra dance with its hood outspread.