பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாம்பு பெ. (n.) ஊர்ந்து செல்லும் உயிரிவகை; snake, serpent. பாம் பறியும் பாம்பின்கால்'.

பாம்புக்கடி பெ.(n.) பாம்பு தீண்டுகை; snake bite.

பாம்புக்கல் பெ. (n.) பாம்பின் நஞ்சை நீக்குவதாக நம்பப்படும் ஒருவகைக் கல்; snake stone which is believed to be an absorbent substance regarded as efficacious in curing snake bite. பாம்புக்காது பெ. (n.) மிகக் கூர்மையாக கேட்கும் திறன்; keen sense of hearing; sharp cars, sharpeness. பாம்புச்சட்டை பெ. (n.) பாம்பு கழற்றும் தோல் உறை; snake's slough.

பாம்புச் செவி பெ. (n.) கூர்மையான செவியுணர்வு; sharp ear, acute hearing. பாம்பு விரல் பெ. (n.) (கையில்) நடுவிரல்; middle finger.

பாய்தல் வி. (v.) I. விரைவாகச் செல்லுதல்; தரையிலிருந்து கிளம்பி ஓர் இலக்கு நோக்கி விரைந்து விழுதல்; spring leap; bounch. 2. ஒன்றின் ஊடாக விரைவாகச் செல்லுதல்; (of water, electricity, light, etc.,) flow, rush.

பாய் பெ. (n.) 1. கோரை, ஓலை முதலிய வற்றால் பின்னப்பட்ட பொருள்; mat. 2.காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பல்களில் அல்லது படகுகளில் கட்டப்பட்டிருக்கும் உறுதியானதுணி;

sail.

பாய்ச்சல் பெ. (n.) விரைவாகச் செல்லும் செயல்; leap; gallop; bound. 'மாடு ஒரே பாய்ச்சலில் வேலியைத் தாண்டியது'. பாய்ச்சுதல் வி. (v.) I.(பயிர், செடி போன்றவற்றிற்கு) நீர் செல்லும்படி செய்தல்; இறைத்தல்; (of water) cause to be supplied, (to the fields); irrigate. 2.(நாளங்களின் வழியே குருதி

பார்த்துவிடுதல்

351

(இரத்தம்) இதயம்) செலுத்துதல்; pump force blood to go through vessels. பாய்மரக் கப்பல் பெ. (n.) காற்றின் விசையால் செல்வதற்கு ஏற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட

(பழங்கால) கப்பல்; sailing ship. பாய்மரப்படகு பெ. (n.) காற்றின் விசையால் செல்வதற்கு ஏற்ற

வகையில் பாய்கள் கட்டப்பட்ட

படகு; sailing boat.

பாய்மரம் பெ. (n.) (காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பலில் அல்லது படகில்) விரிக்கவும் சுருட்டி இறக்கவும் கூடிய வகையில் பாய் கட்டப்பட்டிருக்கும், இரும்பால் அல்லது மரத்தால் ஆன கம்பம்; mast. பாயிரம் பெ. (n) செய்யுள் வடிவ

முன்னுரை; perfare in verse.

பார்த்தல் வி. (v.) I. கண்கள் மூலம் அறிதல் அல்லது உணர்தல்; காணுதல்; see; look at. 2. திரைப்படம், திருவிழா போன்றவை நடக்கும் (இடத்துக்குச் சென்று) காணுதல்; watch; see. 3. சுற்றிப் பார்த்தல் (பார்க்கச் செல்லுதுல்); visit. பார்த்துக்கொள்ளுதல் வி. (v.) I. பொறுப்

போடு கவனித்துக்கொள்ளுதல்; look after; take care of. 2. ஒன்று நிறை வேறுவதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்; சிக்கல் ஏற்படுத்தும் ஒன்றை அல்லது ஒருவரைப் பேணுதல்; see to it that something (does or does not happen, etc.,).

பார்த்துவிடுதல் வி. (v.) (குறிப்பிட்ட)

நிலையை மாற்ற உறுதி மேற் கொள்ளுதல்; word used by a person to challenge something to do something specified. என் தயவு இல்லாமல்