பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

பார்வை

உனக்கு வேலை கிடைத்துவிடுமா என்று பார்த்து விடுகிறேன்'. பார்வை பெ. (n.) 1. பார்க்கும் செயல்; பார்த்தல்; glance; view; look. 2.பார்க்குத் திறன்; (eye) sight, vision. 3. பொதுவிடத்தில் மக்கள் வந்து வணக்கம் செலுத்துதல்; public viewing (for paying homage to important people when they die). 4. தோற்றம்/ எடுப்பான தோற்றம்; appearance / good looks; attractive appearance. 4. மேற்பார்வை; கவனம்; supervision; perusal.

பார்வை நேரம் பெ. (n.) ஒரு அலுவல கத்தில் பொதுமக்கள் அதிகாரிகளைப் பார்க்க அல்லது உறவினர்களோ நண்பர்களோ நோயாளியை

மருத்துவமனையில் சந்திக்க அல்லது மருத்துவர்கள் நோயாளிகளைப் பார்க்க ஒதுக்கப்படும் நேரம்; visiting hours; consulting hours. பார்வையற்ற பெ.அ. (adv.) பார்க்கும்திறன்

இல்லாத; visually handicapped. பார்வையிடுதல் வி. (v.) I. காணுதல்; inspect; watch. 2. மேற்பார்வை யிடுதல்; supervisery visit (for checking) பார்வை விழுதல் வி. (v.) ஒருவரின் கவனம் ஒன்றின்மேல் அல்லது ஒருவரின் மேல் பதிதல்; (of attention) fall on someone or something; have eyes for something; be attracted by. பாராட்டுதல் வி. (v.) 1. உயர்வாகக் கூறுதல்; புகழ்தல்; praise; applaud; commend. 2. பொருட்படுத்துதல்; view something in terms of status, prestige, etc., 3.(உறவு,உரிமை) கொண்டாடுதல்; claim (relationship right, etc.,).

பாராட்டு பெ.(n.) I. பாராட்டும் செயல்; புகழ்ச்சி; praise commendation; appreciation. 2. வாழ்த்து; (always in the plural) congratulations.

கொள்ளாத

பாராமுகம் பெ. (n.) 1. (ஒருவரை) பார்த்தும் பார்க்காதது போல் இருப்பது; deliberate inattention; ignoring; 2. வேண்டுமென்றே புறக் கணிக்கும் போக்கு; கண்டு நிலை; பொருட் படுத்தாமை; indifference; neglect பாராளுமன்றம் பெ. (n.) இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும்; இது மாநிலங்களவை (மற்றும்) மக்களவை என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது; the parliament of India is the Supreme legislative body of the Republic of India. It is a bicameral legislature composed of the president of India. (The Rajya Saba Counsil of State) and the Lok Shaba (house of the people). பாரை பெ. (n.) கவை போன்று நன்கு பிளவுபட்ட வாலையும் அகலமான உடலையும் கொண்ட (உணவாகும்) சில வகைக் கடல்மீன்களைக் குறிக்கும் பொதுப்பெயர்; common term for horse mockerel.

பால்' பெ. (n.) I. (பெண் மார்பிலிருந்து குழந்தைக்காகவும்,

விலங்கின்

மடியிலிருந்து குட்டிக்காகவும் சுரக்கும்) உணவுப் பொருளாகும் வெள்ளை நிற தீருணவு; milk. தாய்ப்பால் 2. (கள்ளி, அழிப்பான் முதலியவற்றினுள் உள்ள) பிசு பிசுப்பான வெள்ளை நிற நீர்மம்; milky juice (of certain plants, such as rubber tree). 3. தேங்காய்த் துருவல் போன்றவற்றை பிழிந்தெடுப்பதன் மூலம் பெறும் வெள்ளை நிற நீர்மம்; the milk extracted from coconut.