பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் 2 பெ. (n.) 1. ஆண், பெண் என்ற பகுப்பு: sex.2.(இலக்.)ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்பால் என ஐந்து வகையாகப் பிரிக்கும் பிரிவு; gender classification (five genders viz., masculine, feminine, human plural, neuter, singular and neuter plural). பால்கட்டுதல் வி. (v.) குடிக்கப்படா பால் வலியுடன் இறுகிப்போதல்; painful swelling of the breasts of mamals caused by not suckling.

பால்காய்ச்சுதல் வி. (v.) புதிதாக ஒரு

வீட்டில் குடியேறும்போது சடங் காகப் பாலைக் காய்ச்சுதல்; cook milk ceremonially when moving to a new house.

பால்குடம் பெ. (n.) முருகன் கோயில், மாரியம்மன் கோயில் முதலிய ஆலயங்களுக்குப் பக்தர்கள் நேர்த்திக் கடனாகப் பால் நிரம்பிய குடங்களைத் தலையில் தூக்கிச் செல்லும் சடங்கு; a ritual in which devotees carry pots filled with milk to temples of Murugan, Mariyamman, etc., in fulfilment of a vow.

பால்குடி மறத்தல் வி. (v.) தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை விடுதல்; (of a baby or young animal) be weaned. பால்குளம் பெ. (n.) தீ மிதித்துவிட்டு வருபவர்கள் காலை நனைப்பதற் காகப் பால் நிறைக்கப்பட்டிருக்கும் சதுர வடிவிலான குழி; pit filled with milk for cooling one's feet after fire walking.

பால்பல் பெ. (n.) குழந்தைப் பருவத்தில் தோன்றிப் பிறகு சிறிய காலத்திலேயே விழுந்துவிடும் பல்; milk tooth. பால்பிடித்தல் வி. (v.) (நெல், கம்பு, சோளம் போன்ற பயிர்களின்) தவச மணிகளில் பயிர் உருவாவதற்கு முன் தவசம் (பால்) வடிவில் உண்டாதல்; (of cereal crops) form milky juice in tender kernels.

பாலாடைக்கட்டி

353

பால் மணம் மாறாத பெ.அ. (adj.) மிகச் சிறிய அகவையுடைய; குழந்தைப் பருவத்திலிருக்கும்; of tender age.

பால்மாறுதல் வி. (v.) 1. வேலை செய்யச் சுணங்குதல்; சோம்பல்படுதல்; shirk (work). சின்ன வேலைதானே, பால் மாறாமல் செய்து முடித்துவிடலாம்'. 2.(செய்வதாகச் சொல்லிவிட்டு) செய்யாமல் பின்வாங்குதல்; பேச்சு மாறுதல்; go back on one's word. பணம் தருவதாகச் சொன்னவன் கொஞ்ச நேரத்தில் பால்மாறி

விட்டான்.'

பால்வினை நோய் பெ.(n.) தொற்று நோய்; sexually transmitted disease. தொடக்க நிலையிலேயே கண்டறிந் தால் சில பால்வினை நோய்களைக் குணப்படுத்திவிடமுடியும்.

பாலாடை பெ. (n.) (குழந்தைக்குப் பால் அல்லது மருந்து புகட்டப் பயன் படுத்தும்) சாய்த்தால் உட்குழிவான தடத்தின் வழியாகப் பால் வரும் வகையில் உள்ள (சங்கு வடிவ) சிறு கிண்ணம்;

conch - like small cup for feeding babies.

பாலம் பெ. (n.) (ஆறு முதலியவற்றின் மேல் போக்குவரத்துக்காக) இரு பகுதிகளை இணைத்துக் கட்டப்படும் அமைப்பு; bridge. 'இந்தப் பாலத்தில் திண்ணூர்திகள் போவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது'.

பாலர் பெ. (n.) சிறுவயதுக் குழந்தைகள்; young children. 'வானொலியில் சிறார்களுக்கான நிகழ்ச்சி.

பாலர்பள்ளி பெ. (n.) சிறு குழந்தை களுக்காக நடத்தப்படும் மழலையர் பள்ளி; nursery school. பாலாடைக்கட்டி பெ. (n.) பாலைக் காய்ச்சிக் குளிர வைத்து உருவாக்கப்