பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுநீரகங்கள் இரண்டுமே பாழ்பட் டிருப்பதால் மாற்றுச் சிறுநீரகம்தான் பொறுத்த வேண்டும்.

பாழாக்குதல் வி. (v.) I. (பணத்தை) பயனற்ற வழியில் செல வழித்தல்; (ஒரு பொருளை) வீணாக்குதல்; வீணடித்தல்; fritter away (money, etc.,); waste. 2. (ஒன்றின்) நல்ல தன்மையை இழக்கச் செய்தல்; கெடுத்தல்; cause damage to; destroy; spoil.

பாழாகுதல் வி. (v.) (எதற்கும் பயன் படாமல் ஒன்று) வீணாதல்; g0 waste. இந்த அரைகுறைத் திட்டத்தினால் பாழான பணம் இலக்கக்கணக்கில் இருக்கும்.

பாழுங்கிணற்றில் தள்ளுதல் வி. (v.) (பொருந்தாத் திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணின்) வாழ்க்கையைப் பாழாக்குதல்; ruin a girl's life (through mismatched marriage); condemn a girl to a life of sorrow.

பாளம் பெ. (n.) (மண், பனி, மாழை போன்றவற்றின்) கனத்த தகடு போன்ற கட்டி; lump of the caked up earth; thick slab.

பாளை பெ.(n.) (பனை, தென்னை போன்றவற்றில் பூங்கொத்துகளை உள்ளடக்கியபடி) மட்டையின் அடி யிலிருந்து பருத்த குழல் போன்று வெளிவரும் பாகம்; spathe of palms. பாளையம் பெ. (n.) (தெலுங்கு நாயக்க அரசர்களுக்காக வரி தண்டவும் போரில் உதவவும்) ஒரு தலைவனின் பொறுப்பில் விடப்பட்ட சிற்றூர் களின் தொகுதி; Group of villages granted to a local chieftain who wouldbe the tax farmer and provide soldiers when required by the Telugu Nayakar kings. பாளையரிவாள் பெ. (n.) (கள்ளிறக்க, பனம்பாளையைச் (சீவப் பயன் படுத்தும்) சற்றுப் பட்டையாகவும் கனமாகவும் இருக்கும் ஒருவகை

பிகு

355

அரிவாள்; knife with a broad blade used by those tapping toddy.

பாற்கடல் பெ. (n.) (புராணங்களில் திருமால் குடிகொண்டிருக்கும் இட மாகக் கூறப்படும்) பாலால் அமைத் துள்ள கடல்; (in the puranas) the ocean of milk which is the abode of vishnu. பாறாங்கல் பெ.(n.) தனித்துண்டாகக் காணப்படும், மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பெரிய கல்; block of granite stone; large piece ofrock;

boulder.

பாறை பெ. (n.) I. பல அளவுகளில் உள்ள பெரிய கருங்கல் துண்டுகள்; rock. இந்தக் கடற்கரையில் பாறைகள் அதிகம்.2. பாறாங்கல்; block ofrock. மலையிலிருந்து பாறைகள் உருண் டோடி வந்தன.

பாறை உப்பு பெ. (n.) பாறைகளிலிருந்து கிடைக்கும் சமையல் உப்பு; rock salt. பான்மை பெ. (n.) பாங்கு; தன்மை; manner; capacity.

பானை பெ. (n.) அரைக்கோள வடிவ அடிப்பகுதியும் அகன்ற வாயும் உடைய மட்கலம்; pot; vessel. பானைக் குடுவை பெ. (n.) சிறுகலம்; small

pot.

பானைமூடி பெ. (n.) பானையை மூட உதவும் மண்தட்டு; a lid used to cover an earthen pot.

பிக்கல்பிடுங்கல் பெ. (n.) தொந்தரவு; vexatious, claims or wants or dues (which one subject to).

பிகு பெ. (n.) கெஞ்சிக் கேட்கவைக்கும் இயல்பு; haughtiness, being unresponsive to request; stiff.