பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

பிகுபண்ணுதல்

பிகுபண்ணுதல் வி. (v.) தன்னையருமைப் படுத்திக்கொள்ளுதல்; to make oneself

to clear.

பிச்சுவா பெ. (n.) கூர் கைப்பிடிக் கத்தி; dagger with a curved point. 'அவன் பிச்சுவா கத்தியை எடுத்து வந்தான் . பிச்சைக்காசு பெ. (n.) குறைந்தளவுப் பணம்; pittance.

பிசகு பெ. (n.) I. எலும்பு மூட்டு விலகி விடுதல்; get sprained; be dislocated. 2. தவறு; mistake. 'மின்இணைப்பில் சிறிது பிசகு ஏற்பட்டுவிட்டது. பிசறு வி. (v.) கிளறுதல், பிசைதல்; mix. பிசிர் பெ. (n.) (துணி, மரத்துண்டு இவற்றின் ஓரத்தில்) திரியாக நீண்டிருக்கும் மெல்லிய பகுதி; rough edge; frayed end.

பிசினாறி பெ. (n.) இவறன் (உலோபி); கருமி; miser. அந்தப் பிசினாறியிடம் பணம் கேட்காதே'

பிசுக்கு பெ. (n.) எண்ணெய் படிவதால் ஏற்படும் பிசுபிசுப்புத் தன்மை; grease. பிசுபிசுப்பு பெ. (n.) ஒட்டுத்தன்மையாதல்; stickiness; greasiness. பிஞ்சில்பழுத்தல் வி. (v.) அகவை வயதுக்கு மீறிய ஒவ்வாச் செயல் (அ) நடத்தை; precocity.

பிஞ்சு பெ. (n.) இளங்காய்; tender unripe fruit. 'பிஞ்சும் காயுமாக இருந்த மாமரம்.

பிட்டுக்கருப்பட்டி

Gu. (n.)

பனங்

கருப்பட்டி; palm sugar. பிடரி பெ. (n.) (மாந்தரின்) பின்தலையின் கீழ்ப் பகுதி; nape.

பிடிகடா பெ. (n.) காயடிக்கப்பட்ட கடா; castrated bull.

பிடிகயிறு பெ. (n.) மாடு கட்டுங் கழுத்துக் கயிறு; rope used in tethering cattle.

பிடிகுவளை பெ. (n) கைப்பிடி வைத்த சிறிய குவளை; small mug or cup with a handle. அந்தப் பிடிகுவளையை எடுத்து வா'.

பிடிசெம்பு பெ. (n.) கைப்பிடியோடுகூடிய செப்பு ஏனம்; a kind of copper vessel with a handle.

பிடிசோறு பெ. (n.) கைப்பிடியளவுள்ள சோறு ; a handful of cooked rice. பிடிமானம் பெ. (n.) பிடிப்பு; hold; support. கூரை பிடிமானம் இல்லாமல் சாய்ந்தது.

பிடிவாதம் பெ. (n.) கொண்டது விடாமை; தன் முரண்டு; adamance; obstinacy. பிணக்கம் பெ. (n.) மாறுபாடு;

dis- agreement.

பிணக்கு பெ. (n.) I. உறவில் மாறுபாடு

கொள்ளல்; strife. 2. ஊடல்; sulkiness. பிணத்தூக்கம் பெ. (n.) கடுத்துயில்; dead sleep.

பிணிப்பு பெ. (n.) கட்டுகை; binding. பிணைப்பு பெ. (n.) நெருக்கம்; closeness. 'பக்கத்து வீட்டுக்காரரிடம் அதிக பிணைப்பு வைக்காதே'.

பிணைமாடு பெ. (n.) இணைக்கப்பட்ட எருதுகள்; apair of oxen yoked together. பிணையம் பெ. (n.) பொறுப்பாண்மை; bail security, guarantee, pledge. பித்தக்கிறுகிறுப்பு பெ. (n.) பித்தத்தினால் வரும் தலைச்சுற்று; dizziness arising from biliousness.

பித்தநரை பெ. (n.) இளம் அகவையில் தோன்றும் வெள்ளை முடி; greyness of the hair in young age; premature grey. பித்தப்பைக்கல் பெ. (n.) பித்தப்பையில் விளையுங்கல் போன்ற கடும் பொருள்; gall stone.

பித்துக்குளி பெ. (n.) கோட்டிக்காரன் (ரி); பித்தம் பிடித்தவன் (ள்); mad person.