பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்துயிர் பெ. (n.) ஏற்றம் மிக்க நிலை; revival,

புதுக்குடித்தனம் பெ. (n.) புதியதாய் திருமணமாகி வந்து புதிய வாழ்க்கை தொடங்குபவர்கள்; home set up by the newly weds as a seperate household. புயல் பெ.(n) கொடுங்காற்று; gale, stom, gust.

புயல் சின்னம் பெ. (n.) புயல் தோன்றுதற் குரிய அறிகுறி; ign of storm. புயல்மையம் பெ. (n.) புயற்காற்று நிலை கொண்டிருக்கும் இடம்; the centre place of storm, cyclone.

புரசை பெ. (n.) யாளைக் கழுத்திலிடும் கயிறு;

halter on head - stall of an elephant.

புரட்சி பெ. (n.) குறுகிய காலத்தில் நிலைமை முற்றிலும் மாறும் தன்மை; மக்கன் எழுச்சி; revolution. புரட்சியாளர் பெ. (n.) நிலைமையை முற்றும் மாற்ற பணிபுரிந்தவர்; revolutionary,

புரட்டல் பெ. (n.) ஏமாற்றுதல்; cheating. புரட்டன் பெ. (n.) உண்மையை மறைத்தும் திரித்தும் கூறுபவன்; twister. 'அந்தப் புரட்டனிடம் என்ன தொடர்புறி.

புரவலன் பெ. (n.) காத்துதவுவோன்; துணை செய்பவர்; protector. புரளிபெ.(n.) பொய்யலர்(வதத்தி);false alarm. 'வெடிகுண்டுப் புரளீ. புரிமணை பெ. (n.) பாண்டம் வைத்தற்கு வைக்கோலைச் சுற்றியமைத்த அடிமணை; ring shaped pad of twisted

straw etc.

புரை பெ. (n.) கண்புரை; cataract. 'எனது வலது கண்ணில் புரை விழுத்து விட்டது.

புரைக்கல் பெ. (n.) மகுந்தரைக்கும் குழியம்மி ; small stone slab for grinding drugs.

புளிக்கவைத்தல்

359

புரையேறுநல் வி. (n.) உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது மூச்சுக்குழலிற் சென்றதால் வெளி வருதல்; to beaffocated by food passing into the wind pipe.

புல்லுமாறு பெ. (n.) அருகம்புல்லில் செய்யப்படும் துடைப்பம்; broom made of a kind of grass.

புலம்புதல் வி. (v) பிதற்றுதல்; to speak foolishly.

புனைம் பெ. (n.) இணையத்தின் உதவி யுடன் திறன்பேசியின் வழியே ஒளிப் படம், காணொலி, கருத்துரைகள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்ள உதவும் செய்திப் பரிமாற்றச் செயலி; the app which helps to share the news, photos and vedios with others.

புழக்கடை பெ. (n.) வீட்டின் பின் வாயில்; backyard, 'புழக்கடைப் பக்கம் போகாநேர்.

புழுங்கலரிசி பெ. (n.) அவித்துக் காய்த்த தெல்லை அரைத்துப் பெற்ற அரிசி; rice obtained from proboiled. புழங்குதல் வி. (v.) கையாளுதல்; to practice.

புழுதி பெ. (n.) மண்தூன்; dust, dried earth. புழுதி உழவு பெ(ட) மானாவாரி நிலத்தில் உழுவது; ploughing in dryland.

புழுதி மழை பெ. (n.) மண்காற்று; dust

storm.

புள்ளக்காரி பெ (n) கைக்குழந்தை வைத் திருப்பவள்; mother with a suckling baby.

புள்ளையாண்டன் பெ. (n.) இளம் பருவத்தினன்;youngster. 'உம் புள்ளை யாண்டஸ் எண்கே காணோம்?. புளிக்கவைத்தல் வி. (v.) நுரைகொள்ள வைத்தல்; to ferment.