பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

புளிங்கறி

புளிங்கறி பெ. (n.) புளிச்சாறிட்டுச் சமைத்த கறி; cury containing tamarind

juice.

புளிச்சரக்கு பெ. (n.) புளிப்பைச் சமமாக்கும் காரப்பொருள்; alkali புளிச்சதண்ணீர் பெ.(n.) புளிப்பேறிய பழஞ்சோற்று நீர்; water allowed to stand over cooked rice and get sour.

புளிச்சேப்பம் பெ. (n.) உண்டது செரியா மையால் வரும் புளித்த ஏப்பம்; belching on account of indigestion. புளிச்சோறு பெ. (n.) புளியிட்டு அட்ட சோறு; boiled rice dressed with tamarind

sauce.

புளித்த கஞ்சி பெ. (n.) நுரைத்து மிகு

வூட்டம் பொதிந்த சோற்று நீர்; yeast.

புளித்த கள் பெ. (n.) புளிப்பேறிய கள்;

sour toddy.

புளித்தநாற்றம் பெ. (n.) நுரைத்துக்கெட்ட மணம் ; sour smell.

புளித்தமோர் பெ. (n.) நுரைத்துக் காடிச் சுவையேறிய மோர்; sour buttermilk. புளிமூட்டை பெ. (n.) புளியை மொத்த மாகவைத்து ஓலைப்பாயால் சுற்றிய கட்டு; roll of tamarind packed in a basket.

புளியேப்பம் பெ.(n.) சாப்பிட்ட உணவு செரிக்காததால் வரும் ஏப்பம்; belching due to indigestion.

புளுகன் பெ. (n.) கூசாமல் பொய் சொல்பவன்; barefaced liar. 'அவன் ஒரு அண்டப்புளுகன்'.

புளுகுணி பெ. (n.) அதிகமாகப் பொய் பேசும் ஆள்; lier.

புற்செதுக்கி பெ. (n.) புல்லைச் செதுக்க உதவுங்கருவி; grass hoe.

புற்றீசல் பெ. (n.) (பெரும்பாலும் உவமையாக) புற்றிலிருந்து பெரு மளவில் புறப்படும் ஈசல்; (often used as a simile) swarm of moths.

புறக்கடை பெ. (n.) வீட்டின் பின்புறம்; backyard, as of a house.

புறக்கணித்தல் பெ. (n.) மதியாதிருத்தல்; சேராதிருத்தல்; disregard. புறக்கணிப்பு பெ. (n.) கலந்துகொள்ள மறுத்து ஒதுங்குவது; boycott. புறக்காப்பு பெ.(n.) புறத்தே அமைக்கப் படும் காவல்; outer guard of sentry. புறக்காவல் பெ. (n.) வெளிச்சுற்று; out post police.

புறங்கடை பெ. (n.) வீட்டின் வெளிப்புறம்; outside of a house.

புறங்காண்(ணு)தல் வி. (v.) முறியடித்தல்;

to defeat, put to flight.

புறங்கூறுதல் வி. (v.) காணாவிடத்துப் பிறர்மேல் அலர் தூற்றுதல்; to backbite, slander.

புறங்கொடுத்தல் வி. (v.) பின்புறங் காட்டுதல்; to tum one's back. புறஞ்சாய்தல் வி. (v.) தோற்றல்; to be defeated, routed. புறஞ்சிறை பெ. (n.) மாளிகை முதலிய வற்றிக்கு அருகில் உள்ள இடம்; premises in the neighbourhood of a palace or castle.

புறஞ்சேரி பெ. (n.) தகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் இடம்; outskirts of a city, suburb.

புறணி பெ. (n.) (ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிக் கூறும்) குற்றம் குறை; backbiting.

புறத்திண்ணை பெ. (n) வீட்டு வெளித் திண்ணை; pial.

புறத்தோற்றம் பெ. (n.) வெளிப்புறத் தோற்றம்; exterior.