பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

water mixed with lime and turmeric or saffron coloured water before important persons such as newly wedded couple in auspicious occasions. 2. தெய்வத் திருமேனி முன்பு திருவிளக்கு (தீபாராதனை) வழிபாடு; light or camphor in circular motion before an idol. ஆராய்ச்சி பெ. (n.) 1.ஆய்வு, திறனாய்வு; research, critical study. 2. நோட்டம், கூர்ந்தாய்வு; overseeing, investigation, examination. ஆலங்கட்டி பெ. (n.) I. மழைக்கல்; hail stone. 2. கல்மழை; forzen drops of rain. நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது'. ஆலத்தி பெ. (n.) ஆரத்தி பார்க்க. ஆலை பெ. (n.) கரும்பாலை; sugar cane. ஆவணம் பெ. (n.) 1. உரிமை ஓலை; legal document, bond, deed. 2. உரிமை; right to property, ownership. 3. அடிமைத் தனம்; slavery, bondage, service. ஆவல் பெ. (n.) I. பேராசை; craving, great desire, eagerness, earnestress. 2. afgi பம்; desire. ஆவி பெ. (n.) I.உயிர்; life. 2. இறந்தோர் உயிர்கள்; spirits of the dead. 3. ஆதன் (ஆன்மா); soul. 4. மனம் ; mind. 5. வலிமை; strength power. ஆவிபிரிதல் பெ. (n.) சாதல்; dying. ஆவிபோக்கல் பெ. (n.) 1. உயிர் நீக்குதல்; taking away life, killing. 2. பேசிப் பேசிக் களைத்தல்; wasting of energy of excessive talk. ஆவியாதல் பெ. (n.) ஆவியாய்ப் போதல்; evaporating. ஆழ்தல் வி. (v.) 1. மூழ்குதல்; to sink, plunge, dive. 2. அழுத்துதல்; to be absorbed, immersed, overwhelmed. 3. விழுதல்; to fall down. 4. சோம்புதல்; to be idle, lazy. 5. வருந்துதல்; to suffer. ஆழ்துயில் பெ. (n.) காதால் கேட்கவும் ஆள்காட்டிவேலை 29 அளிக்கவும் கூடிய உறக்கத்தை ஒத்த நிலைக்கு ஒருவரை உட்படுத்தி அவர் ஆழ்மனத்தில் உள்ளதை அறிய முயலும் உளவியல் பண்டுவ முறை; hypnosis. ஆழங்கால் பெ. (n.) 1. அதிக ஆழ மில்லாத நீர்நிலை; shallow water. 2.பலகை தாங்குவதற்காகச் சுவரிற் பதிக்கும் கட்டை; wooden prop inserted in a wall to support a shelf. 3. பல்கால் பழகி பட்டறிவும் ஈடுபாடும் மிகுதல்; getting involved after long experience. ஆழங்காற்படுதல் வி. (v.) 1. அழுத்துதல்; to be immersed in become absorbed in get involved. 2. பட்டறிவு மிகுந்திருத்தல். ஆழம் பெ.(n.) I.ஆழ்ந்திருத்தல்; depth. 2.நிலத்தில் மேற்பரப்பினின்று கீழே போகும் அளவு, மேலிருந்து கீழே தாழும் அளவு; measurement from top down. 3. ஆழ்ந்த கருத்து; depth of thought. 4. நீராழம்; depth of water. 5.மனத்தின் ஆழம்; depth of mind. ஆழம் பார்த்தல் வி. (v.) 1. நீர் நிலையின் ஆழத்தை அளந்தறிதல்; measuring the depth of water sources. 2. ஒருவனறிவு, ஆற்றல், பண்பு முதலியவற்றை ஆய்ந்தறிதல்; gauge (a person with discreet questions); size (someone) up. ஆழ அகலம் பெ. (n.) ஒன்றைப் பற்றிய முழுமையான விளக்கம் அல்லது முழுமையான அறிவு; complete details of something. தொழிலின் ஆழ அகலம் புரியாமல் அதில் இறங்கக் கூடாது. ஆழாக்கு பெ. (n.) உழக்கு, அரைக் காற்படி;1/8ofameasure, dry or liquid measure known otherwise as Ulakku. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை ஆள்காட்டிவேலை பெ. (n) ஏமாற்று வேலை; betrayal.