பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆள்கை ஆள்கை பெ. (n.) ஆளுதல்; govening, rule. ஆள் சேர்த்தல் பெ. (v.) படைக்கு அல்லது தொழிற்சாலைக்கு ஆட்களைத் தேர்ந் தெடுத்தல்; recruit (to the army, factory, etc.,). ஆள்படை பெ. (பே.வ.) (n.) உதவி செய்யச் சேர்ந்திருக்கும் வேலையாட்கள்; helpers, manpower. ஆள் மாறாட்டம் பெ. (n.) ஒருவன் தன்னை வேற்றாளாகக் காட்டி ஏமாற்றுதல்; impersonation (with an intention to cheat). ஆள்விடுதல் வி. (v.) ஆள் வாயிலாகச் செய்தி அனுப்புதல்; to send a person as a messenger. ஆளறிதல் பெ. (n.) ஆளை அடையாளம் காட்டுதல்; identification. ஆளாக்குதல் வி. (v.) 1. கோபம், வருத்தம் போன்ற விரும்பத்தகாத நிலைகளுக்கு ஒருவரை உள்ளா குதல், உட்படுத்துதல்; plunge someone into something, drive. 'நாட்டின் நிலை அவரைத் துன்பத்திற்கு ஆளாக்கியது. 2. ஒருவர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருதல்; come up in life. ஆளாகுதல் வி. (v.) பருவமடைதல்; girl attain puberty. ஆளுமை பெ. (n.) I. ஒரு மாந்தனின் தனிப்பட்ட குணத் தொகுப்பு; personality; individuality. 'முரட்டுத் தனம் ஆளுமையின் வெளிப்பாடு'. 2. சொத்தின் மேல் ஒருவருக்கு இருக்கும் உரிமை; right of possession or ownership. ஆற்றல் பெ. (n.) 1. திறமை; capability; ability skill. நல்லது கெட்டது பகுத்துணரும் ஆற்றல்'.2.ஒரு செயலுக்கு அல்லது இயக்கத்துக்குத் தேவையான மின் ஆற்றல், வெப்பம், விசை போன்றவை; energy, power. ஆற்றாமை பெ. (n.) ஒரு சூழலில் எதுவும் செய்ய முடியாத நிலை; இயலாமை; helplessness, despair. 'அவளைப் பார்க்கவே முடியாது என்கிற ஆற்றாமை அவனிடம் இருந்தது. ஆற்றுதல் வி. (v.) 1. மிகவும் சூடாக இருக்கும் ஒன்றின் சூட்டைக் குறைத்தல்; cool. 'பால் கொதிக்கிறது ஆற்றிக்கொடுங்கள்'. 2. புண்ணை குணமாக்குதல்; heal a wound. 3. தலைமுடியிலுள்ள ஈரத்தைக் காற்றில் உலர்த்துதல்; dry the hair. 4. துன்பத்தில் இருப்பவரை தேற்றுதல்; பிறரிடம் கூறித் தன் மனச் சுமையைக் குறைத்துக் கொள்ளுதல்; console a person in distress; seek consolation. மனைவி இறந்ததால் சோகத்தை ஆற்றமாட்டாமலிருந்தார்'. ஆறப்போடுதல் வி. (v.) ஒரு சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காணாது, தள்ளிப்போடுதல்; defer (something untill the problem loses its urgency). ஆறவமர பெ. (n.) அமைதியாய், பொறுமையாக; calmly and patiently. ஆறறிவு பெ. (n.) ஐம்புலன் உணர்வோடு கூடிய பகுத்தறியும் திறன்; rational faculty. ஆறினகஞ்சி பெ. (n.) ஒரு செயலை உடனே முடிக்காமல் தள்ளிப் போட்டதால் அந்தச் செயலுக்கான உந்துதல் தீவிரத் தன்மையை இழந்த நிலை; something that has been allowed to lose its momentum. ஆறுதல் பெ. (n.) 1. வருத்தம்,ஏமாற்றம் முத தலியவற்றிலிருந்து மனம் மீள தெம்பு தருவது; தேறுதல்; comfort, consolation. 'மனம் பாராமாயிருந்த போது அப்பா கூறிய சொற்கள் ஆறுதலாக இருந்தன'. 2. செயல் படுவதில் மிகப் பொறுமை; calmness. 'உன்னுடைய ஆறுதலான போக்கு வணிகத்திற்குச் சரிவராது'.