பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுதல்பரிசு பெ. (n.) போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறாத வர்களை ஊக்குவிக்கும் வகையில் அளிக்கப்படும் பரிசு; consolation prize. ஆறுமணிப்பூ பெ. (n.) மாலையில் மலரும் மலைப்பூ வகை; evening primrose for it blossoms at about 6 P.M. ஆனந்தக்கண்ணீர் பெ. (n.) மகிழ்ச்சிப் பெருக்கின் அடையாளமாய் வெளிப் படும் கண்ணீர்; tears of joy. ஆனந்தம் பெ. (n.) பெருமகிழ்ச்சி, பேரின்பம்; felicity, rapturous joy, bliss. ஆனைமுகன் பெ. (n.) பிள்ளையார்; ganesa as the elephant - faced god. இக்கட்டு பெ.(n.) நெருக்கடி ; கடினமான சிக்கல்; predicament; quandary; crisis. இக்கரை பெ. (n.) கடல் அல்லது ஆற்றின் கரை; this side of the shore or bank (ofa river, lagoon, etc.,). இக்காலம் பெ. (n.) 1. இந்தக் காலம்; the present time. 2. இப்பொழுது; at this time, in this period. இகத்தாளம் பெ. (n.) ஏளனம்; mockery. இகழ்ச்சி பெ. (n.) 1. தாழ்வு; undervalueing 2.இகழ்வு; detraction. 3. இழிவு; dishonour, contempt. 4. தாழ்ச்சி; disparagement. 5. ஈனம் ; baseness. 6.பழி; scom. 7. குற்றம்; fault. இங்குமங்கும் வி.அ. (adv.) அங்குமிங்கும் பார்க்க. இங்ஙனம் பெ. (n.) 1. இங்கு; here. 2.இவ்வாறு ; thus, in this manner. இசகுபிசகு பெ. (n.) I. முறைகேடு; irregularity. 2. குழப்பம்; confusion. 3. பிறழ்வு; dislocation. இசை பெ. (n.) பண்; music. இசைக்கருவி பெ. (n.) இசையை உண் டாக்கும் கருவி; musical instrument. இஞ்சித்துவையல் 31 இசைத்தட்டு பெ. (n.) இசை, பேச்சு முதலியவை கோடுகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நெகிழியால் (பிளாஸ்டிக்) ஆன வட்டவடிவத் தகடு; (gramophone) record. இசைத்தமிழ் பெ. (n.) முத்தமிழுள் ஒன்று; Tamil literature which consists of verses set to music as distinct from poetry or drama, one of Mu-t-tamil. இசை நாற்காலி பெ. (n.) இசை ஒலிக்கும் போது தங்கள் எண்ணிக்கையை விடக் குறைவாகவும், வட்டமாகவும் போடப்பட்டிருக்கும் நாற்காலி களைச்சுற்றி ஓடிக் கொண்டும் இசை நின்றதும் நாற்காலிகளில் இடம் பிடித்து உட்கார்ந்தும் விளையாடும் விளையாட்டு; game ofmusical chairs. இசையமைப்பாளர் பெ. (n.) திரைப்படம், நாடகம் முதலியவற்றுக்கு இசை யமைப்பவர்; music director or composer (of a film, play, etc.,). இசைவு பெ. (n.) I. பொருத்துகை; suitability, fitting in one with another. 2. தகுதி; fitness. 3. உடன்பாடு; agreement, consent, approval. 4. ஏற்றது; appropriateness. 5. இணக்கம்; agreement. 6. பொருத்து; joining so as to fit in, co-ordination. இஞ்சி பெ. (n.) I. கரிப்புள்ள இஞ்சிப் பூண்டு; ginger plant. 2. இஞ்சிக் கிழங்கு;ginger-tuber. இஞ்சிக்கருக்கு பெ. (n.) இஞ்சிச்சாற்றைக் கொதிக்க வைத்த குடிநீர்; boiled juice of ginger. இஞ்சிச்சாறு பெ. (n.) இஞ்சியிலிருந்து எடுக்கும் சாறு ; ginger juice. இஞ்சித்துவையல் பெ. (n.) இஞ்சியைப் பிற கறிப்பொருள்களோடு சேர்த் தரைத்த ஒரு வகைத்துவையல்; ginger made into a paste by treating it with other condiments for use as a side dish for food.