பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

பொத்தாம்பொதுவாக

பொத்தாம்பொதுவாக பெ (n.) பொதுப் படையாக; not particularly or specifically.

பொத்தியாட்டம் பெ. (n.) கண் பொத்தி விளையாட்டு; game where blind folded

person tries to catch others.

பொத்திவைத்தல் வி. (v.) 1. மறைத்தவ்; to conceal. 2. பாதுகாப்புப்படுத்துதல்; to keep safe.

பொத்தை பெ. (n.) பருமனானது; anything large or bulky.

பொத்தைக்கால் பெ. (n.) யானைக்கால் தோய்; clephantiasis.

பொதிமாடு பெ. (n.) வண்டி இழுக்கும் எருது; loaded cart drawn by bullocks. பொதுக்கருத்து பெ. (n.) பொதுநலக் கருத்து; comman welfare idea. பொந்து பெ. (n.) மரம், சுவர், திலம் முதலியவற்றில் தானாக ஏற்பட் டிருக்கும் குழிவு; hole, in tree or in the ground "பொத்து மாதிரி வீடுர். பொய்ச்சாக்கு பெ. (n.) நொண்டிச்சாக்கு; lame excuse.

பொரியரிசி பெ. (n.) வறுத்த அரிசி; parched rice.

பொல்லாக்காலம் டெ (n.) கெட்ட காலம்; evil bad period, worst time. பொல்லாப்பு பெ. (n.) பழி ஏற்றல்; displeasure of a person. பொலி பெ. (n.) களத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தூற்றாத நெல்; heap of paddy. நெல்லையெல்லாம் பொலியாககுவித்துவை'.

பொளிதல் வி. (v.) அம்மி, ஆட்டுக்கல் போன்றவற்றைச் சொரசொரப்பாக இருக்க கொத்துதல்; make the surface of the stone for grinding rough using a

pointed chisel. 'அம்மியை நல்லா பொளித்துக்கொடு'

பொறுப்பாளி பெ. (n.) பொறுப்பானவன்; responsible person.

பொறுப்புடைமை பெ. (n.) கடமைப் பொறுப்பு: blication.

பொறுமை பெ. (n.) அடக்கம்; patience,

tolerance, meekness.

பொறை பெ. (n.) சிறுகுன்று; mall hill.

பொறை நோய் பெ. (n.) பேற்றுவலி; pain. of pregnancy.

பொறையிலான் பெ. (n.) பொறுமை யில்லாதவன்; impatient person. பொன்செய்தல் வி. (v.) நல்ல செயல் செய்தல்; to do a good deed. பொன்புனைதல் வி. (v.) மங்கல தாண்பூட்டி மணத்தல்; to many as tying the tali.

பொன்மணை பெ. (n.) பொற்பலகை; golden plank used as a seat fixed with knobs.

பொன்வணிகர் பெ. (n.) பொன் நகை விற்கும் வணிகர்கள்; dcalers in gold. பொன்வறுவல் பெ. (n.) பொன்னிறமாக வறுத்தல்; to fry till it attains gold colour orred colour.

பொன்விலை பெ. (n.) ஏற்றமான விலை; very high price, as of gold, பொன்விழா பெ. (n.) ஐம்பதாம் ஆண்டுக் கொண்டாட்டம்; golden jubilee. "எங்கள் நிறுவனம் பொன்விழாக் கண்டது.

பொன்னத்துப்பெட்டி பெ. (n.) திருமணத் தில் தாலி கூறைப் புடைவைகள் எடுத்துச் செல்லும் பெட்டி; abasket in: which the tali and wedding sarees are carried in marriage. பொன்னுக்குவிங்கி பெ. (n.) அம்மைக் கட்டு; mumps.