பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

போலி நியாயம்

போலிப்பாசம் பெ. (n.) பொய்யாகக் காட்டும் அன்பு; sophism; false attachment; untrue affection.

போலிப்பேச்சு பெ. (n.) பசப்புப் பேச்சு; hypocritical speech. 'உன் போலிப் பேச்சு இங்கு எடுபடாது.

போலி வேடம் பெ. (n.) போலி நடிப்பு; hypocrisy. 'உன் போலிவேடம் அதிக நாள் எடுபடாது.

போலிவேலை பெ. (n.) கள்ளத்தனமான வேலை; shoddy work.

போற்றுதல் வி. (v.) வழிபடுதல் ; to praise, applaud.

போற்று பெ.(n.) பாராட்டு, வழிபடு; praise, invocation.

LD

மக்கல் பெ. (n.) கெட்டுப்போன பொருள்; anything spoiled. 'அரிசி மக்கலா யிருக்கிறது'.

மக்களித்தல் வி. (v.) சதை பிறழ்தல்; get sprained. 'கால் மக்களித்துக் கொண்ட தால் நடக்க முடியவில்லை'.

மக்கு Gu. (n.) 1. மந்தகுணம் ; sluggisheness, dullness. 2. அறிவிலி; ignorant person, dullard.

மங்கல் பெ. (n.) 1. ஒளி மழுக்கம்; dimness, obscurity, growing dim. 2. இருள் கலந்த நேரம்; darkness, dusk. மங்காத்தா பெ. (n.) (சீட்டு விளை யாட்டில்) மூன்று சீட்டுகள் வைத்து ஆடும் விளையாட்டு; a card game. ஒரு கும்பல் ஆலமரத்தடியில் உட்கார்ந்து மங்காத்தா ஆடிக் கொண்டிருந்தது.

மங்கிணி பெ.(n.) I. மந்த அறிவுள்ளவன்-

ள்; extremely dull person. 'அவ ஒரு

மந்தப் புத்திக்காரன்'. 2. பயனற்ற வன்-ள்; worthless person.

மச்சம் பெ. (n.) தோலில் உண்டாகும் இயற்கைக் கரும்புள்ளி; mole on the skin. 'அவனுக்குக் கன்னத்தில் மச்சம் எடுப்பாய் உள்ளது.

மச்சான் பெ. (n.) மனைவியின் உடன் பிறந்தவன்; (ஒருவனுடைய) உடன் பிறந்தவளின் கணவன்; மாமா அல்லது அத்தையின் மகன்; wife's brother or sister's husband; the son of one's maternal uncle or paternal aunt.

மச்சினன் பெ. (n.) மைத்துனன்; wife's brother. மனைவியின் உடன்

பிறந்தோன்.

மச்சினி பெ. (n.) மனைவியின் தங்கை; younger sister of one's wife. மசக்கை பெ. (n.) கருவுற்ற பெண்ணுக்கு உண்டாகும் மயக்கம்; morbid longings of a pregnant woman. அந்தப் பெண்ணை வேலை ஏவாதே அவள் மசக்கையாய் இருக்கிறாள்.

மசமசத்தல் வி. (v.) ஒரு செயலை முடிக்க காலந்தாழ்த்தல்; to be slow and indecisive. வேலை செய்யாமல்

மசமசனு நிற்கிறான்'.

மஞ்சள் அட்டை பெ. (n.) (கால்பந்து, வணரிப் பந்தாட்டம் (ஹாக்கி) போன்ற விளையாட்டுகளில் ஆட்டத்தின் விதியை மீறிய ஆட்டக் காரருக்கு முதல்கட்ட எச்சரிக்கை யாகக் காட்டப்படும் மஞ்சள் நிற அட்டைத் துண்டு; (in football, hockey, etc.,) yellow card.

மஞ்சள் கடுதாசி பெ.(n.) ஒருவர் தனது கடனைவிடச் சொத்து குறைவாக இருப்பதால் கடன் தந்தவர்களுக்குத் தனது சொத்தை விழுக்காட்டின் அடிப்படையில் நயன்மன்றம் மூலம் பிரித்துத் தந்து கடன் தொல்லை யிலிருந்து காத்துக் கொள்ள