பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயன்மன்றத்தில் பதிவு செய்யும் மனு; petition given by a debtor unable to pay his debts; notice of bankruptcy.

மஞ்சள்காப்பு பெ. (n.) கோயில்களில்

திருவிழா நாட்களில் மூலவருக்கு மஞ்சள் அப்பிச் செய்யும் ஒப்பனை (அலங்காரம்); turmeric paste with which an idol is covered on special occasions.

மஞ்சள் நீராட்டு பெ. (n.) பூப்பெய்திய பெண்ணை மஞ்சள் நீரால் குளிப்பாட்டி நடத்தப்படும் சடங்கு; ritual bath in tumeric mixed water fora girl who has attained puberty. மஞ்சுவிரட்டு பெ. (n.) ஏறுதழுவல்; a kind of bullfight. 'பொங்கல் திருவிழாவின் போது மஞ்சு விரட்டு நடக்கும்'. மட்டக்கோல் பெ. (n.) கொத்து வேலைக் கருவிகளுலொன்று; rule, ruler, mason's smoothing rule. மட்டப்பலகை பெ. (n.) சமநிலை காட்டுங் கொத்துக் கருவி; mason's level frame with plumb line.

மட்டற்ற மகிழ்ச்சி பெ. (n.) அளவு கடந்த மகிழ்ச்சி; எல்லையற்ற மகிழ்ச்சி; overwhelming; happiness, limitless, joy. 'குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

மட்டு பெ. (n.) பொதுவாக உள்ளதைவிட

அல்லது இணைக்கிணை உள்ளதை விடக் குறைவு; (of something) a little less (than the average or nomal) உயரம் கொஞ்சம் மட்டுதான்.

மட்டை பெ. (n.) 1. (தென்னை, பனை முதலியவற்றில்) ஓலையைத்தாங்கிய பட்டைப் பகுதி; long flat stalk in palm and coconut trees. 2. தேங்காயை மூடிய நார் பகுதி; fibrous cores. 2.மது மயக்கத்தால் நினைவற்று கிடத்தல்; a drunkard in un consessicence. 'அவன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு

மட்டையாயிட்டான்.

மடை

371

மட்பாண்டம் பெ. (n.) மண்ணாற் செய்த ஏனம்; earthen ware.

மடசாம்பிராணி பெ. (n.) திட்டும் சொல் (சிறிதும் அறிவற்றவன்-ள்); scolding word (a very stupid person). மடத்தனம் பெ. (n.) அறிவைப் பயன் படுத்தாத அல்லது சிந்திக்காத தன்மை ; stupidity. மடத்தனமாகப் பேசாதே.

மடல் பெ. (n.) திருநீறு, சந்தனம் போன்றவற்றை வைப்பதற்கானசற்று நீண்டு குழிந்திருக்கும் மரப்பெட்டி அல்லது சிறிய ஏனம்; receptacle (for

keeping sacred ash etc.,) made of wood or metal.

மடாதிபதி பெ. (n.) மடத்தின்தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் துறவி; head of a (chiefly Hindu) religious institution. மடிப்பிச்சை பெ. (n.) நேர்த்திக்கடனுக் காக இடுப்புத் துணியை விரித்து ஏந்திப் பெறும் பிச்சை; alms received in the part of the cloth worn around the waist (as part of a vow made to a deity).

குழந்தை குணம் அடைந்தால் மடிப்பிச்சை எடுப்பதாக நேர்ந்து கொண்டாள்.

மடு பெ. (n.) 1. சுனை; பொய்கை; water hole. 'மான்கள் மடுவில் நீர் குடித்துக் கொண்டிருந்தன. 2. பெரும் பள்ளம்; deep gorge. ஆற்றின் கரையோர மடுவில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது.3. குழி; pit. 'செத்துக் கிடந்த நாயை மடுதோண்டிப் புதைக்க வேண்டும்'.

மடை பெ. (n.) (வயலில், தோட்டத்தில், வீட்டில்) நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறு வழி; narrow channel for water. 'வரப்பில் நடந்து கொண்டிருந்தவன்