பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

மடைமாற்றுதல்

கால் தவறி மடையில் விழுந்து விட்டான்.

மடைமாற்றுதல் வி. (v.) குறிப்பிட்ட தேவைக்காக உள்ளதை மாற்றிப் பயன்படுத்தல்; divert something (for a different use). பொதுநலத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பாதி போக்கு வரத்துத் துறைக்கு மடைமாற்றுதல் செய்வது முறையன்று'.

மடைவாய் பெ.(n.) தீர்நிலையை ஒட்டி அமைந்திருக்கும் மடையின் முனை; the end of the channel that is joined to the water source. 'தண்ணீர் பாய்ந்த வுடன் மடைவாயைக் கட்டிவிட்டு வா.

மண்டகப்படி பெ. (n.) திருவிழாக் காலத்தில் ஊர்வலரை (உற்சவ மூர்த்தியை) மண்டபத்தில் எழுத் தருளச் செய்வதற்காக ஒருவர் அல்லது ஒரு பிரிவினர் ஏற்கும் பொறுப்பு; responsibility for the ceremony of receiving the deity at a hall during festival. 'இன்றைக்குக் கோயில் திருவிழாவில் எங்கள் மண்டகப்படி'. மண்டலம் பெ. (n.) தாற்பதிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் கொண்ட கால அளவு; period of forty to forty five days (for a puja, treatment, etc.,). ஒரு மண்டலம் நோன்பு இருக்க வேண்டும்.2. நகரத்தின் உட்பிரிவு;

division.

மண்டலமுழுக்காட்டு பெ. (n.) கோவிலில் குடமுழுக்கு முடிந்த நாளிலிருந்து ஒரு மண்டலம் வரை நாள்தோறும் செய்யப்படும் திருமுழுக்கு; ceremony of anointing idols for a period (48 days) after consecration.

மண்டூகம் பெ.(n.) புரிந்துகொள்ளவும் புரிந்து கொண்டதைச் சரிவர வெளிப்படுத்தவும் தெரியாத ஆள்; nincompoop.

மண்டைக்கர்வம் பெ. (n.) தலைக்கனம்; swollen head; haughtiness. 'நாலு எழுத்து படித்துவிட்டாலே பலருக்கு மண்டைக்கர்வம் வந்துவிடுகிறது'.

மண்டைக்கனம் பெ. (n.) செருக்கு, திமிர்; arrogance.

மண்டைகாய்தல் வி. (v.) (அதிகமாக சிந்தித்து மேலும்) சிந்திக்க முடியாமல் போதல்; become unable to think (as a result of thinking intensely).

மண்டையிடி பெ. (n.) தலைவலி; head ache. மண்டையை

உடைத்துக்கொள்ளுதல்

வி. (v.) ஒரு சிக்கலை எப்படித் தீர்ப்பது என்று கடினமாகச் சிந்தித்தல்; think hard to find a solution to a problem. மண்டையைப் பிளத்தல் வி. (v.) தலைவலி, வெயில் போன்றவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்குக் கடுமையாக வருத்துதல்; (ofheadache) split; (of sun) scorch.

மண்டையைப் போடுதல் வி. (v.) இறத்தலைக் குறிக்கும் வழக்கு; (said unsympathetically) die. மண்டையோடு பெ. (n.) தலையின் எலும்புப் பகுதி; skull.

மண்டை வீங்குதல் வி. (v.) செருக்கு அதிகரித்தல்; be swollen headed.

மண்ணை அள்ளிப்போடுதல் வி. (v.) மண்ணைப் போடுதல் பார்க்க. மண்ணைக் கவ்வுதல் வி. (v.) போட்டி, தேர்தல் போன்றவற்றில் அவமானப் படும் வகையில் தோற்றுப்போதல்; suffer a humiliating defeat. மண்ணைப்போடுதல் வி. (v.) 1. ஒருவ னுடைய வேலையில் இழப்பு அல்லது தடை ஏற்படும்படி செய்தல்; cause something loss of (something). வேலையை விட்டுப் போகச் சொல்லி, என் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள்