பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

மருக்கொழுந்து

மருக்கொழுந்து பெ. (n.) தறுமணம் மிகுந்த இலைகளைக் கொண்ட ஒருவகைக் குத்துச்செடியின் இலை; southern wood; its aromatic leaves. மருட்டுதல் வி. (v.) அச்சமூட்டுதல்; கலவரப்படுத்துதல்; frighten; disturb. மருத்துவச்சி பெ. (n.) ஊர்ப்புறங்களில் பட்டறிவின் அடிப்படையில் மகப் பேறு பார்க்கும் பெண்மணி; (traditionally trained) midwife (in rural

areas).

மருதாணி பெ. (n.) உள்ளங்கை, உகிர் முதலியவற்றில் அரைத்து இட்டுக் கொண்டால் சிவப்பு நிறம் தரும் ஒருவகை இலை; leaves of the plant henna crushed and used as dye (applied on the palms and nails) (the plant) henna. மருந்துக்கடை பெ. (n.) மருந்துகள் விற்கும் கடை; medical shop; pharmacy.

மருந்துக்குக்கூட வி.அ. (adv.) (எதிர் மறைச் சொற்களோடு மட்டும்) எதிர்பார்க்கப்படும் குறைந்த அள விலும் கூட இல்லாத நிலை; even a little, even the bare minimum of (something).

மருந்துச்சீட்டு பெ. (n.) நோயாளியை நன்கு ஆய்வு செய்து பின்பற்ற வேண்டிய பண்டுவ முறை, சாப்பிட வேண்டிய மருந்து போன்றவற்றைப் பரிந்துரைத்து மருத்துவர் எழுதித் தரும் தாள்; doctor's prescription. மருந்து மாயம் பெ. (n.) தன் செயலை நிறைவேற்றிக் கொள்வதற்காக திறமையாக மேற்கொள்ளும் வழி

வகை; uncanny means. மருந்துவைத்தல் வி. (v.) வசியம் செய்யக் கூடியது அல்லது நோய் ஏற்படுத்தக் கூடியது என்று நம்பப்படும் பொருளை உணவில் கலந்து

ஒருவரை உண்ணச் செய்தல்; mix a poison in one's food which supposedly acts as a magic charm and causes illness. மரை பெ. (n.) I. திருகாணி ஒரு பரப்பின் உள்ளே செல்வதற்காக நுனியிலிருந்து மேல்நோக்கிச் சுற்றிச்சுற்றி செல்லும் குழிந்த கோடு; thread of a bolt or nut). 2. திருகாணியை அது பொருத்தப் பட்ட பரப்பின் மறுபக்கத்தில் உறுதியாகப் பற்றியிருக்கும் சிறு வளையம்; nut of the bolt.

மல்குதல் வி. (v.) கண்ணில் கண்ணீர்

நிறைதல்; ததும்புதல்; (oftears) well up. மல்யுத்தம் பெ. (n.) முதுகு தரையில்

படும்படி பிடிபோட்டுத் தள்ளி, எதிராளியை விழச் செய்யும் விளையாட்டு; wrestling.

மல்லாக்க பெ.(n.) முதுகு கீழாகவும் முகம் மேல் நோக்கியும் இருத்தல்; lic on (one's) back; be supine. மல்லாடுதல் வி. (v.) ஒன்றைச் செய்து முடிக்கவும், நிறைவேற்றவும் களைப் படைதல்; அல்லாடுதல்; struggle (to do something); carry on with difficulty. மல்லாத்துதல் வி. (v.) மல்லாந்து இருக்கும் படி செய்தல்; make (someone) lie on (their) back.

மல்லாந்து பெ. (n.) நிமிர்ந்து படுத்தல்; lie on (one's) back; be supine. மல்லுக்கட்டுதல் வி. (v.) I. மற்போர் செய்தல்; wrestle. 2. பேச்சில் சிக்கல் செய்தல், தேவையில்லாமல் ஒருவருடன் வாய்ச்சொல்லில் ஈடு படுதல்; engage in a wrangle. மல்லுக்கு நிற்றல் வி. (v.) எதிர்த்துப் பேசி சண்டைபோடுதல், எதிர்க்கும் ஆளோடு போராடுதல்; contend with (someone) struggle, wrestle (with). மலங்கமலங்க வி.அ. (adv.) குழப்பத்தோடு ஒன்றும் புரியாமல்; puzzled; bewildered.