பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலர்ச்செண்டு பெ. (n.) பூச்செண்டு;

bouquet.

மறித்தல்

375

மலர்வளையம் பெ. (n.) இறந்தவர்களுக்கு மழுங்கல் பெ. (n.) 1. ஒன்றின் முனை,

வகையில்

அஞ்சலி செலுத்தும் வைக்கும் மலர்களையும் இலை களையும் வைத்துக் கட்டிய வளையம்; wreath.

மலைப்பழம் பெ. (n.) மலைப்பகுதியில் தடித்த தோலைக் கொண்ட, மிகவும் இனிப்பான சிறிய வாழைப்பழம்;a

kind of banana which has thick skin and is very sweet (cultivated in hilly areas).

மலைப்பு பெ. (n.) 1. விளங்கிக்கொள்ள

முடியாமல் வியப்புற்ற நிலை; astonishment; amazement; surprise. 2. செயலற்ற நிலை; state of perplexity, dismay. மலையேற்றம் பெ. (n.) பொழுதுபோக் காகவோ அல்லது திறவினை யாகவோ கடினமான பாறைகள் நிறைந்த மலைகளில் முறையான பயிற்சி, கருவிகள் ஆகியவற்றின் உதவியோடு ஏறுதல்; mountaineering. மலையேறுதல் வி. (v.) 1. ஒருவரைப் பிடித்திருக்கும் மருள் அவரை விட்டு நீங்குதல்; (of a state of trance) pass. 2. பெரும்பாலும் இறந்த கால மற்றும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவை நடைமுறையில் இல்லாது போதல்; become a thing of the past. 'எது சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற காலம் மலை யேறிவிட்டது'.

மலைவாசி பெ. (n.) மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்; people of tribal community living on the hills.

மழமழப்பு பெ. (n.) உராய்வு ஏற்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருக்கும் வழவழப்பு; smoothness.

பரப்பு போன்றவை கூர்மையாக இல்லாத தன்மை; bluntness. மழுங்க லான பாறை'. 2. அறிவு, மூளை போன்றவற்றைக் குறித்து வரும் போது நுட்பமாக அல்லது தெளிவாக ஆய்ந்தறிய இயலாத தன்மை; கூர்மையின்மை; inability to think clearly. அவனுக்கு புத்தி மழுங்கலாகி விட்டது'.

மழுங்குதல் வி. (v.) 1. கத்தி போன்ற

வற்றில் கூரிய முனை தேய்ந்து கூர்மை இழத்தல்; become blunt or dull. 'முனை மழுங்கிப்போன கத்தி'. 2. இயல் பான, நல்ல நிலையிலிருந்து கெட்டுப்போதல்; be blunted.

மழுப்புதல் வி. (v.) உரிய விளக்கம் தராமல் தழுவுதல்; be evasive.

மழைக்காலம் பெ. (n.) வடகிழக்குப் பருவக்காற்று வீசும் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்; the Tamil months of Aippasi, Karthigai.

மழையுடை பெ.(n.) உடல் முழுவதும் மழையில் நனையாமல் இருக்க அணிந்து கொள்ளும், செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட நீளுடை ; rain coat.

மளமள என்று வி.அ. (adv.) மடமட வென்ற பொருள் ; in a swift and brisk manner; quickly.

மளிகை பெ. (n.) பலசரக்கு; grocery. மற்றவர் பெ.(n.) குறிப்பிடப்படும் ஆளைத் தவிர்த்து இன்னொருவர்; குறிப்பிட்ட ஒன்றில் தொடர்பில்லாத ஒருவர்; பிறர்; the other one. மறந்துபோய்க்கூட வி.அ. (adv.) தற்செய லாகக் கூட; தவறுதலாகக்கூட; even inadvertently; even by mistake.

மழுக்குதல் வி. (v.) கூர்மை இழக்கச் மறித்தல் வி. (v.) ஒருவர் அல்லது ஒன்று

செய்தல்; make blunt.

மேற்கொண்டு போக முடியாதபடி