பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

மறு ஒலிப்பதிவு

தடுத்தல் ; intercept; block (someone or a way).

மறு ஒலிப்பதிவு பெ. (n.) திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்போன்ற வற்றில் படத்தொகுப்புக்குப் பிறகு, நடித்தவர்களின் குரல்களைப் பதிவு செய்யும் பணி;

re-recording. மறுதலித்தல்

வி. (v.) 1. நோய் முதலியவைத் திரும்ப வருதல்; relapse. 2. தான் சொன்ன சொல்லையே மறுத்தல்; tum down. மறுபடி வி.அ. (adv.) இன்னொரு முறை; திரும்ப; again.

மறுபிறவி பெ. (n.) 1. அடுத்த பிறவி; rebirth. 2.இறப்பில் இருந்து மீண்டு வரும் நிலை; new life. 3. எழுச்சி

மிக்க அல்லது ஏற்றம் மிக்க நிலை; புத்துயிர்; rebirth.

மறுபேச்சு பெ. (n.) 1. ஒருவர் கூறியதற்கு மாறாகப் பேசும் பேச்சு; argument. 2. மறுத்துப் பேசும் பேச்சு; எதிர்ப்பேச்சு; talking back. மறுவாழ்வு பெ. (n.) இயல்பான வாழ்க் கையை இழந்தவர்களுக்குத் திரும்ப அமைத்துத் தரப்படும் வாழ்க்கை; rehabilitation; resettlement. மறுவாழ்வுமையம் பெ. (n.) கைம் பெண்கள், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், குமுகத்தில் தலி வடைந்தோர் போன்றோர்க்குச் சீரான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும் அமைப்பு; rehabilitation centre. 'விதவைகள் மறுவாழ்வு மையம்'.

மறுவீடு பெ. (n.) மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் திருமணத்துக்குப் பிறகு பெண் வீட்டுக்கு முதல் முறையாக அழைத்துச் செல்லுதல்; the custom of taking a married couple to the groom's or bride's place soon after the wedding.

மறைப்பு பெ. (n.) ஒரு பக்கத்திலிருப்பதை மறு பக்கத்திலிருந்து பார்க்க முடியாதபடி அல்லது வெயில் நேரே அடிக்காதபடி ஏற்படுத்தும் தடுப்பு; screen.

மறைமுகம் பெ. (n.) நேரடியானதாகவோ வெளிப்படையானதாகவோ அல்லாமல் இருப்பது; indirect. மறைவிடம் பெ. (n.) 1. மறைந்திருப் பதற்குப் பயன்படும் இடம்; hiding place. 2. கழிப்பறை; lavatory. மன்றம் பெ. (n.) விழா, நிகழ்ச்சி போன்றவை நடத்துவதற்கு உரிய மண்டபம்; hall or auditorium. மன்றாடுதல் வி. (v.) 1. கெஞ்சி வேண் டுதல்; இறைஞ்சுதல்; implore. 2.இறைவனிடம் வேண்டிக் கொள் ளுதல்; prayer.

மன்னாதிமன்னன் பெ. (n.) I. மன்னர்

களுக்கு எல்லாம் மன்னன்; king of kings. 2. மிகுந்த வல்லமையும் திறமையும் உடை யவன்; past master.

மன இறுக்கம் பெ. (n.) (சோகம். இழப்பு போன்ற) அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகளினால் ஏற்படும் பதற்ற மான மனநிலை; depression. மனஉளைச்சல் பெ. (n.) விரும்பத்தகாத பாதிப்பினால் ஒருவருக்கு மனத்தில் ஏற்படும் மனவமைதியற்ற இறுக்க மானநிலை; mental agony.

மனக்கசப்பு பெ. (n.) ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் வெறுப்புக் கலந்த மனக்குறை; மனத்தாங்கல்; bitterness.

மனக்கண் பெ. (n.) ஒரு காட்சியை அல்லது நிகழ்வை ஒருவர் கண்களால் அல்லாமல் தனது மனத்தினால் பார்ப்பதாக நம்பப்படுவது; mind's

eye.

மனக்கணக்கு பெ. (n.) எழுதிப்பார்க் காமல் மனத்திற்குள் கணக்கிடும்