பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறை; ability to do basic arithmetical operations, mentally; mental arithmetic. மனக்குறை பெ. (n.) ஒருவரின் மீது அல்லது ஒன்றின் மீது ஒருவருக்கு உள்ள வருத்தம்; மனத்தாங்கல்; grievance.

மனக்கோட்டை பெ. (n.) எதிர்காலத்தைக் குறித்து மனத்தில் வளர்க்கும் கற்பனை; daydream.

மனச்சிதைவு பெ. (n.) ஒருவருடைய எண்ணமும் செயலும் இயல்பு நிலையிலிருந்து விலகி இருப்பதால் உண்டாகும் மனநோய்; schizophrenia. மனச்சோர்வு பெ. (n.) ஊக்கமும் முயற்சியும் இழந்து எதிலும் முழு மனத்தோடு ஈடுபட முடியாத வெறுமையுணர்வு மிகுந்த நிலை; boredom; ennui.

மனசாட்சி பெ. (n.) சரி அல்லது தவறு என்று சுட்டிக்காட்டுவதும் தவறு செய்தால் குற்ற உணர்வை எழுப்புவதுமான conscience.

உள்ளுணர்வு;

மனத்தாங்கல் பெ. (n.) ஒருவர் மீது ஒருவர் மனத்தில் கொள்ளும் குறை; ஒருவர் அடையும் வருத்தம்; grievance; misunderstanding.

மனத்தில் போட்டுக்கொள்ளுதல் வி. (v.) I. ஒருவர் தன்னிடம் கூறும் செய்தி, தரவல், விளக்கம் போன்றவற்றைப் பிறருக்குத் தெரிவிக்காமல் தன்னள வில் மட்டும் வைத்துக் கொண் டிருத்தல்; keep to oneself; keep in mind. 2. பெரும்பாலும் எதிர்மறையில் முன்பு நடந்த நிகழ்ச்சியை நினைத்து வருந்துதல்; feel offended; take something to heart.

மனத்துணிவு பெ. (n.) ஒன்றைச் செய்வதற்கு மனத்திற் கொள்ளும் துணிவு; courage.

மனத்தைக் கல்லாக்கிக்கொள்ளுதல் வி. (v.) துயரம், அதிர்ச்சி போன்றவை

மனப்பான்மை

377

ஏற்படுத்தும் சூழலின் வருத்தத்திற்கு உள்ளாகாதவாறு மனத்தைத் திடப்படுத்திக்கொள்ளுதல்; உணர்ச்சி களைக்கட்டுப்படுத்திக் கொள்ளுதல்; harden one's heart.

மனதறிய வி.அ. (adv.) தான் என்ன செய்கிறோம் என்பது குறித்த தன் உணர்வுடன் முழு உணர்வறிகை; knowingly.

மனதார வி.அ. (adv.) முழு மனத்தோடு; நிறைவாக; whole heartedly. மனநலம் குன்றிய பெ.அ. (adj.) மனநலம் பிறழ்ந்த; mentally ill.

மனநிலை பெ. (n.) மனத்தில் உணர்வுகள் குறிப்பிட்ட வகையில் இருக்கும் நிலை; state or frame of mind.

மனநோய் பெ. (n.) மனநலம் குன்றிய நிலை; mental illness. மனநோயாளி பெ. (n.) மனநலம் குன்றியவர்; mental patient.

மனப்பக்குவம் பெ. (n.) ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட பட்டறிவின் காரணமாக எதையும் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகாமல் எதிர் கொள்ளும் மனத்தின் தன்மை; maturity.

மனப்பாங்கு பெ. (n.) மனப்பான்மை; attitude.

மனப்பால் குடித்தல் வி. (v.) தான் விரும்பியபடி ஒன்று நடக்கும் என்று வீணாக நம்பிக்கையை அல்லது ஆசையை வளர்த்துக் கொள்ளுதல்; be under an illusion; entertain (false hope). மனப்பான்மை பெ. (n.) ஒருவரிடம் குறிப்பிட்ட உணர்வு, எண்ணப் போக்கு போன்றவை குறிப்பிட்ட சூழலில் மேலோங்கியிருக்கும் நிலை; mental attitude; spirit.