பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

மனப்பூர்வமான

மனப்பூர்வமான பெ.அ. (adv.) முழு மனத்தோடு கூடிய; whole hearted. மனப்போக்கு பெ. (n.) மனம் செயல்படும் வகை; attitude.

மனம் அடித்துக்கொள்ளுதல் வி. (v.) இனம் புரியாத உணர்வினால் மனம் நிலை கொள்ளாமல் இருத்தல்; தவித்தல்; be

restless.

மனம் குவிதல் வி. (v.) ஒருவர் தன் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்துதல்;

concentrate.

மனம் கோணுதல் வி. (v.) ஒருவருடைய செயலால் மற்றவருடைய மனம் வருந்துதல்; be displeased. மனம் திரும்புதல் வி. (v.) ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு மனம் மாறுதல்; coming back to the fold.

மனம் திறந்து வி.அ. (adv.) 1. எதையும் மறைக்காமல் வெளிப்படையாக; without reservation. 2. ஒளிவுமறைவு இல்லாமல்; open heartedly.

மனம் துணிதல் வி. (v.) மனதில் துணிவை ஏற்படுத்திக்கொண்டு விரும்பத் தகாத அல்லது கடினமான ஒன்றைச் செய்வதற்கு முயலுதல்; have the heart (to do something); muster up courage. மனம்போல் வி.அ. (adv.) ஒருவர் விரும்பியபடியே; விருப்பம் போல் நினைத்தபடியே; according to one's wishes; as (one) pleases; on impulse. மனம்போனபடி வி.அ. (adv.) 1. பேச்சு, செயல் போன்றவை எந்தவகைக் கட்டுப்பாடும் இல்லாமல்; without restraint. 2. விருப்பம் போல்; without

self control. <

மனம்வாடுதல் வி. (v.) விரும்பத்தகாத ஒன்றைச் செய்வதற்கு ஒருவருடைய மனம் இடம் கொடுத்தல்; have the

heart to do on say (something) be willing to do.

மனம்விட்டு வி.அ. (adv.) மனம் திறந்து

பார்க்க.

மனம்வைத்தல் வி. (v.) ஒன்றைச் செய்வதற்கு அவற்றின் மீது அக்கறை அல்லது ஈடுபாடு காட்டுதல்; give one's mind to (something).

மனமார வி.அ. (adv.) முழு மனத்தோடு, மனநிறைவாக; whole heartedly.

மனமாற்றம் பெ. (n.) மனத்தில் கொண் டிருக்கும் கருத்து! எண்ணம் முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்; changing one's mind, a change of heart. மனமுடைதல் வி. (v.) மன உறுதி இழத்தல்; be heart broken, lose heart. மனமுவந்து வி.அ. (adv.) விரும்பி; மகிழ்ச்சியுடன்; willingly, with pleasure; heartily.

மனமொத்த பெ.அ. (adj.) ஒருவரை யொருவர் நன்றாகப் புரிந்து கொண் டிருக்கிற; harmonious.

மனவளர்ச்சி குன்றிய பெ. (n.) பிறவி

யிலிருந்தே மூளையின் இயல்பான செயல்பாடு குன்றிய; mentally challenged.

மனு பெ. (n.) 1. வேலை முதலிய வற்றுக்காக விண்ணப்பிக்கும் படிவம்; application (entry) form. 2. குறை, முறையீடு போன்றவற்றைத் தெரிவித்து எழுதும் கடிதம்; petition. மனுச்சொத்து பெ. (n.) வழக்கில் தொடர்புடைய சொத்து; peoperty under litigation. மனுசெய்தல் வி. (v.) வேலை முதலிய வற்றுக்கு மனு எழுதி அனுப்புதல் அல்லது தருதல்; விண்ணப்பித்தல்; make an application, petition.

மனுதாரர்

பெ. (n.) விண்ணப்பம் அளிப்பவர்; applicant, petitioner.