பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

மாத்திரத்தில்

தரக்கூடிய பெண்ணினத்தையும் உள்ளடக்கிய கொம்புடைய வீட்டு விலங்கின் பொதுப்பெயர்; common name for cow, ox and buffalo. 2. சற்றுப் பெரிய அளவில் இருக்கும் சோழி; large shell.

மாத்திரத்தில் இ.சொ. (part) (பெய ரெச்சத்தை அடுத்து வரும்போது ஒரு செயல் நிகழ்ந்த மறுகணத்தில்) என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச் சொல்; உடன்; particle used in the sense of "no sooner than" 'at onece'. மாத்திரம் பெ. (n.) எம்மாத்திரம், எந்த மாத்திரம் என்ற தொடர்களில் ஒன்றுடனோ ஒருவனுடனோ ஒப்பிடும்போது குறிப்பிடப்படு வதன் அல்லது குறிப்பிடப்படு பவரின் நிலை. அளவு போன்றவை மிகவும் எளிமை என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; (எந்த) மூலைக்கு; 'particle used in the sense of (of what) consequence'. மாதாந்தர பெ.அ. (adj.) மாதாந்திர பார்க்க.

மாதாந்திர பெ. (n.) ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய; மாதாந்திரச் செலவு.

monthly.

மாநகரம் பெ. (n.) பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரம்; city. மாநகரக் காவல்'. மாநகராட்சி பெ. (n.) மாநகரத்தைப் பேணும் உள்ளாட்சி அமைப்பு; corporation of a city. 'சென்னை மாநகராட்சி.

மாநாடு பெ. (n.) உறுப்பினர்களும் பார்வையாளர்களும் பெருமளவில் கலந்து கொள்ளும் கூட்டம்; conference. 'உலகத் தமிழ் மாநாடு'. மாநிலங்களவை பெ. (n.) சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்

பட்டவர்களோடு

குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் களையும் உறுப்பினர்களாகக் கொண்ட, இந்தியப் பாராளு மன்றத்தின் இரு அவைகளில் ஒன்று; council of states (upper house of the Indian Parliament); (in India) Rajya sabha. மாநிலம் பெ. (n.) இந்தியாவில் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பகுதி; (in India) state (organized on the basis of the language predominately spoken there).

மாநிறம் பெ. (n.) மாந்தர்களின் உடல் நிறத்தைக் குறிப்பிடும்போது சிவப்பு என்றோ கறுப்பு என்றோ சொல்ல முடியாத, இரண்டுக்கும் இடைப் பட்ட நிறம்; complexion that is neither fair nor dark.

மாப்பிள்ளை பெ. (n.) 1. மணமகன்; bridegroom. 2. மருமகன்;

son-

in-law. 3. அத்தையின் அல்லது மாமாவின் மகளையோ மனைவியின் தம்பி யையோ உடன்பிறந்தவளின் கணவ னையே குறிப்பிடும் சொல்; a tem referring to the son of one's paternal aunt or of maternal uncle or to the younger brother of one's wife.

மாப்பிள்ளை அழைப்பு பெ. (n.) திருமணம்

நடக்கும் இடத்துக்கு மாப்பிள்ளையை உரிய மதிப்புடன்

ஊர்வலமாக அழைத்து வரும் சடங்கு; the ceremony of receiving and taking the bridegroom in procession to the wedding. மாப்பிள்ளை எடுத்தல் வி. (v.) பெரும் பாலும் தன் உறவுக்குள் அல்லது சாதிக்குள் மணமகனைத் தேர்ந் தெடுத்தல்; choose a bride groom (mostly within one's circle of relations or community).

மாப்பிள்ளைத் தோழன் பெ. (n.) திரு மணத்தின்போது மாப்பிள்ளைக்குத் துணையாக இருக்கும். மணமகளின் உடன்பிறந்தோன் அல்லது மண