பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளின் நண்பன்; bestman. மாப்பிள்ளை முறுக்கு பெ. (n.) மற்றவர் தம்மைப் பற்றி உயர்வாகக் கருத வேண்டும் என்பதற்காக ஒருவர் பழகுவதில் காட்டும் இறுக்கம்; affected airs of superiority. மாம்பழக்கட்டு பெ. (n.) புடவை இடுப்பில் இறுக்கமாக நிற்பதற்காகக் கொசு வங்களை மடித்துச் செருகிக் கட்டும் முறை; the manner of wearing a saree by rolling the pleats at the waist. மாமன் பெ. (n.) மாமா; uncle. 'இது என் மாமா வீடு.

மாமனார் பெ. (n.) கணவனுடைய அல்லது மனைவியுடைய தந்தை; father in law.

மாய்ச்சல் பெ. (n.) சோம்பல்; laziness.

ஒரேமாய்ச்சலாக இருக்கிறது

மாய்தல் வி. (v.) I. நேர்ச்சி, போர் முதலியவை காரணமாக இறத்தல்; உயிர்விடுதல்; perish, die (in an accident, etc.). 2. ஒன்றைப் பற்றிய தனது வியப்பு, குறை போன்ற வற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி அசந்துபோதல்; wallow in regret, surprise, etc. 3. அழித்தல்; destroy,

devastate.

மாய்ந்து மாய்ந்து வி.அ. (adv.) மிகவும் களைப்படைந்து ஆற்றல் முழு வதையும் செலவழித்து, விரைவாக; using all one's strength and energy.

மாய்மாலம் பெ. (n.) 1. பிறர் இரக்கத்தைப் பெறுவதற்காக உண்மை நிலையை மறைத்துச் செய்யும் நடிப்பு (பாசாங்கு); pretension, deceit. 2.ஏமாற்று வேலை; deceit. மாயமந்திரம் பெ. (n.) நம்ப முடியாத தையோ எளிதின்மை களையோ நிகழ்த்தும் நுண்ணுத்தி; magic, sorcery.

செயல்

மாலைபோடுதல்

381

மாயமாகுதல் வி. (v.) காணாமல் போதல்; disappear.

மார்தட்டுதல் வி. (v.) I. பிறரிடம் இல்லாதது தன்னிடம் இருக்கிறது என்றோ பிறர் செய்ய முடியாததைத் தன்னால் செய்ய முடியும் என்றோ மற்றவர் முன்னிலையில் பெருமை யுடன் கூறிக்கொள்ளுதல்; boast, brag. 2.ஆரவாரமாகப் பேசுதல் ; indluge in

rhetoric.

பலமாக

மாரடித்தல் வி. (v.) 1. துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மார்பில் கைகளால் அடித்துக் கொள்ளுதல்; beat (one's) breast (by way of mourning the dead). 2. தொல்லை தருவதாகக் கருதும் ஒன்றை அல்லது ஒருவரை வைத்துக் கொண்டு அல்லது விருப்பம் இல்லாத வேலையைச் செய்து கொண்டு மிகவும் துன்பப்படுதல்; be obliged to stick it out.

மாராப்பு பெ. (n.) மார்பை மறைக்கும்

புடைவையின் ஒரு பகுதி; the portion of a saree that is drawn over the breast.

மாலை சூட்டுதல்; வி. (v.) மாலையிடுதல் பார்க்க.

மாலை சூடுதல் வி. (v.) திருமணம் செய்துகொள்ளுதல்; marry (by garlanding).

மாலைநேரக் கல்லூரி பெ. (n.) நண்பகல் (மதியம்) தொடங்கி மாலை வரை இயங்கும் கல்லூரி; (of an educational institution such as a) college functioning between noon and early evening (in India) evening college.

மாலைபோடுதல் வி. (v.) கழுத்தில் மணி

மாலை அல்லது துளசி மாலை அணிந்து குறிப்பிட்ட காலம் வரை நோன்பு (விரதம்) மேற்கொள்ளுதல்; observe a period of strict austerities prior