பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

மாலை மரியாதை

to going on a pilgrimage, wearing a garland as a token of this.

மாலை மரியாதை பெ. (n.) ஒருவரை வரவேற்கும்போது மாலையிடுதல் போன்ற மதிப்பின் பொருட்டு செய்யும் மரபு வழக்கம்; the custom of honouring something (especially by garlanding).

மாலை மாலையாக வி.அ. (adv.) கண்ணீர் பெருமளவில் தொடர்ந்து; (of tears) copiously.

(v.)

மாலை மாற்றுதல் வி. திருமணத்தின்போது மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றி அணிவித்துக் கொள்தல்; (of the bride and the groom) exchange garlands (as a wedding ritual). மாலையிடுதல் வி (v.) (மாலை போட்டு) திருமணம் செய்து கொள்ளுதல்;

marry.

மாலையும் கழுத்துமாக வி.அ. (adv.) திருமணக் கோலத்தில்; in the bridal constume (i.e., as a bride). மாவட்டம் பெ.(n) ஒரு மாநிலத்தில் நிர்வாக ஏத்துக்காக மக்கள்தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்

டிருக்கும் பல வட்டங்கள் கொண்ட பிரிவு; (administrative) district. மாவடு பெ. (n.) I. ஊறுகாய் செய்வதற் காகப் பயன்படுத்தும் பிஞ்சு மாங்காய்; very small tender mango (used as pickle). 2.மாம்பிஞ்சுகளை உப்பு நீரில் ஊற வைத்துத் தயாரிக்கும் ஊறுகாய்; pickle of mavadu.

மாவரி பெ. (n.) மாவு அரிக்கும் சல்லடை;

sieve.

மாவிளக்கு பெ. (n.) வெல்லம் சேர்த்துப்

பிசைந்த அரிசி மாவில் நெய் ஊற்றித்

திரியிட்டு ஏற்றும் இறைவிளக்கு; lamp shaped from a dough of rice powder and raw sugar and lighted in worship. மாவு பெ. (n.) 1. அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தவசங்களைக் காயவைத்து அரைப்பதால் கிடைக்கும் தூள்; flour (of some grains). கோதுமை மாவு' . 2. ஊற வைத்து அரைக்கப்பட்ட அரிசி, உளுந்து முதலியவை; dough of wheat, etc., (to prepare chapathi, etc.,). தோசை மாவு நன்றாகப் பொங்கியிருக்கிறது'. மாவுக்கட்டு பெ. (n.) எலும்பு முறிந்த இடத்தில் மருந்து கலந்த மாவைப் பூசிப் போடப்படும் கெட்டியான வெள்ளை நிறக் கட்டு; cast. மாவுச்சத்து பெ. (n.) அரிசி, கோதுமை, சோளம், உருளைக்கிழங்கு முதலிய வற்றில் உள்ள உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலைத் தரும் சத்துப்பொருள்; carbohydrate; starch. மாவுப்பூச்சி பெ.(n.) இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சிப் பயிர் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதும் தடிம னாகவும் உருண்டையாகவும் இருப்பதுமான ஒருவகை வெள்ளை நிறப் பூச்சி; mealy bug.

மாள்தல் வி. (v.) 1. இறத்தல்; சாதல்; die. காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர்மாண்டனர். 2. நீங்குதல்; (inthenegative) end. மாளாத்துயர். மாளிகை பெ. (n.) பெரிய பரப்பளவில் நிறைய அறைகளைக் கொண்ட பெரிய இல்லம்; palace; mansion. குடியரசுத் தலைவர்மாளிகை'. மாற்றம் பெ. (n.) 1. ஒரு தன்மை, கூறு, வடிவம், நிலைமை முதலியவை முற்றிலுமாகவோ குறிப்பிடும் அளவுக்கோ மாறும் அல்லது மாற்றப் படும் நிலை; change. 2. மாற்றல்;

transfer.