பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றல் பெ. (n.) ஒரு பணியிடத்திலிருந்து மற்றொரு பணியிடத்துக்கு அல்லது ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்துக்குச் செல்லும் அல்லது செல்லவைக்கும் நிர்வாக ஏற்பாடு; transfer (of an employee to another place or post). மாற்றாந்தாய்

பெ. (n.) தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதன் மூலம் தாயின் இடத்துக்கு வரும் பெண் ; step mother. மாற்றாந்தாய் மனப்பான்மை பெ. (n.) சமமாகக் கருதி நடத்தப்பட வேண்டியவர்களில் தான் விரும்பிய வருக்கு மட்டும் எல்லா உரிமைகளும் அளித்து, விரும்பாதவரை முற்றாக ஒதுக்கும் போக்கு ; ஒருதலைச் சார்பு நடத்தை; stepmotherly attitude, partiality.

மாற்றான் பெ. (n.) 1. பகைவன்; எதிரி; foc. 2. மற்றவர், பிறர்; neighbour, other

person.

மாற்றிமாற்றி வி.அ. (adv.) அடுத்தடுத்து, தொடர்ந்து; one after the other, continuously.

மாற்றுதல் வி. (v.) 1. திருத்துதல், நீக்குதல், சேர்த்தல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றையோ ஒருவரையோ புதிய நிலைக்கு வருமாறு செய்தல்; change. 2. ஒரு பொருள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு அல்லது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு கொண்டு வருதல்; displace, exchange,

transfer. 3. காசோலையை வங்கியில் கொடுத்துப் பணம் பெறுதல்; encash (a cheque). மாற்று பெ. (n.) I. ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு ஈடு, வேறு; replacement, alternative, substitute. மாற்றுப் பேருந்து.2.தங்கம், வெள்ளி ஆகிய மாழைகளின் கலப்பற்ற தூய்மை நிலை; (of gold, etc.,) degree of fineness.

மாறிமாறி

383

மாற்று அறுவைச் சிகிச்சை பெ. (n.) உறுப்பு மாற்று அறுவை மருத்துவம்; organ transplantation.

மாற்று ஒற்றையர் ஆட்டம் பெ. (n.) முதல் ஆட்டத்தில் ஆடியவர் மற்றொரு ஆட்டத்தின் எதிரணி ஆட்டக்கார ரோடும் மற்றொரு ஆட்டத்தில் ஆடியவர் முதல் ஆட்டத்தின் எதிரணி ஆட்டக்காரரோடும் விளையாடும் ஏற்பாடு; (in games reverse singles.

மாற்றுச் சான்றிதழ் பெ. (n.) பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங் களை விட்டுச் செல்லும்போது ஒரு மாணவரின் பிறந்த தேதி, படிப்பு, தாய் தந்தையின் பெயர், மதம் முதலிய தரவல்களைத் தரும் சான்றிதழ்; certificate given to a student at the time of leaving school or college (in India) transfer certificate.

மாற்று மதிப்பு பெ. (n.) ஒரு நாட்டின் பணத்துக்கு ஈடாக மற்றொரு நாட்டின் பணமதிப்பு; exchange value. மாற்றுமுறை பெ. (n.) வழக்கமானமுறை களிலிருந்து மாறுபட்டு இருக்கும் முறை; altemative. மாற்று முறை மருத்துவம்'.

மாறாக வி.அ. (adv.) ஒன்றுக்கு எதிரான அல்லது முரணான வகையில்; on the contrary. 'நான்நினைத்ததற்கு மாறாக நடந்திருக்கிறது.

மாறான பெ.அ. (adj.) ஒன்றுக்கு எதிரான அல்லது முரணான; contrary to. எதிர்பார்க்கும் ஒழுங்குக்கு மாறான நடத்தை'.

மாறி

பெ. (n.) கணக்கிலோ சமன்பாட்டிலோ மாறக்கூடிய மதிப்பைக் கொண்ட உறுப்பு; (in mathematics) a variable. மாறிமாறி வி.அ. (adv.) 1. முதலில் ஒன்று,

பிறகு மற்றொன்று என்ற முறையில்