பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

மிதிவண்டி

பரப்புடைய சிறு விரிப்பு; doomat. 2. செருப்பு, காலணி; sandal, footwear.

மிதிவண்டி பெ. (n.) கால்களால் மிதித்து இயக்கப்படும் ஈருருளி (சைக்கிள்); bicycle.

மிதிவெடி பெ. (n.) கண்ணிவெடி; landmine.

மிரட்டல் பெ. (n.) செய்கையால், பேச்சால் அச்சமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்; threat, intimidation.

மிரட்டுதல் வி. (v.) அச்சப்பட வைத்தல், அச்சுறுத்துதல், எச்சரித்தல்; threaten (by word or act) intimidate.

மிரள்தல் வி. (v.) அச்சத்தால் கலக்க மடைதல், கட்டுப்பாடு இழத்தல்; get frightened or scared.

மிரளமிரள வி.அ. (adv.) மிரட்சியோடு இங்குமங்கும் பார்த்தபடி; (to look at something or someone) in perplexity. மிருகக்காட்சிசாலை பெ. (n.) உயிரியல் பூங்கா; 200.

மிழற்றுதல் வி. (v.) மழலையாகப் பேசுதல் ; to prattle.

மிளகாய் பெ.(n.) I. பச்சைமிளகாய்; green chilli.2.மிளகாய் காய்க்கும் செடி; the plant that bears chilli. 3. காய்ந்த மிளகாய்; dried chilli. மிளகாய்த் தூள் பெ. (n.) I. காய்ந்த மிளகாயை அரைத்த பொடி; powder made ofred chilli. 2. சாம்பார்ப்பொடி; a powder made of red chilli, coriander seeds, etc., used in preparing some food items.

மிளகாய்ப்பொடி பெ. (n.) மிளகாய்

வற்றலை வறுத்து இடித்துப் பெருங் காயம், கடலைப் பருப்பு போன் றவை சேர்த்து உருவாக்கும் தூள்; chilli powder with other ingredients.

மிளகாய் வற்றல் பெ. (n.) காய்ந்த மிளகாய்; dried chilli.

மிளகுக் குழம்பு பெ. (n.) மிளகையும் வறுத்த பருப்பையும் அரைத்துத் தயாரிக்கப்படும் குழம்பு; a sauce for food made with pepper and fried dhal. மிளகு ரசம் பெ. (n.) பருப்பைச் சேர்க் காமல் புளிக்கரைசலில் மிளகையும், சீரகத்தையும் பொடித்துப் போட்டு உருவாக்கும் ஒருவகைக் காரமான சாறு (ரசம்); a kind of soup prepared by adding powdered pepper, cumin seeds,

etc.,

மிளிர்தல் வி. (v.) 1. ஒளிர்தல்; glitter. 2. சிறப்பாக வெளிப்படுதல், பளிச் சிடுதல்; sparkle.

மின் அழுத்தம் பெ. (n.) மின் கம்பிகளில்

பாயும் மின்சக்தியின் ஆற்றல்; voltage. மின் ஆளுமை பெ. (n.) ஒரு அமைப்பின் அனைத்துப் பிரிவுகள், கிளைகள் ஆகியவற்றைக் கணிப்பொறி மூலம் இணைத்து, எல்லாச் செயல்பாடு களையும் இணையத்தின் வழியாக நடத்தும் நிர்வாகம்;

e-govemance. மின் எரியூட்டி பெ. (n.) திடக் கழிவுகள் அல்லது பிணம் போன்றவற்றை எரிக்கப் பயன்படும் மின்கருவி;

incinerator.

மின் கம்பி பெ. (n.) மின்சாரத்தைக்

கடத்தும் கம்பி; wire to carry electric current.

மின் கலம் பெ. (n.) வேதியியல் முறையில் மின்சாரம் உருவாகும் அமைப்பு; dry cell, battery.

மின் தடை பெ. (n.) தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மின்னோட்டம் இடையே நின்றுவிடுதல்; power failure.

மின்திருட்டு பெ. (n.) முறையான மின் இணைப்பைப் பெறாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் சட்ட முரண் செயல்;

power - theft.