பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின் நிலையம் பெ. (n.) மின்சாரத்தை உருவாக்கும் இடம்; power plant. மின் மயானம் பெ. (n.) மின் எரியூட்டி பிணங்களை எரிக்கும் மயானம்; electric crematorium.

மின் மாற்றி பெ.(n.) மின்னோட்டத்தின் அளவைக் குறைக்கவோ அதிகரிக் கவோ பயன்படும் மின்கருவி; transformer.

மின்மினிப்பூச்சி பெ. (n.) இருட்டில் பறக்கும்போது ஒளிவிட்டு மின்னும் உறுப்பை வால் பகுதியில் கொண்ட ஒரு சிறு பூச்சி;

glow - wom, firefly. மின்விசிறி பெ. (n.) மின்ஆற்றலின் மூலம் இறக்கைகளைச் சுழல வைத்துக் காற்று வீசச் செய்யும் கருவி; electric fan. மின்விளக்கு பெ. (n.) மின்னாற்றலால் ஒளிரும் விளக்கு; electric light.

மின்வெட்டு பெ. (n.) மின்சாரம் குறையும் காலத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மின்சார வழங்கீடு நிறுத்தும் செயல்;

power cut (as a means at regulating the supply of electricity when there is shortage).

மின்வேலி பெ. (n.) மின்சாரம் பாயும் முள் கம்பி வேலி; wire fence charged with electricity. 'மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் ஆகும்'. மின்னஞ்சல் பெ. (n.) இணையத்தின் மூலம் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொருகணிப்பொறிக்குத் செய்தி அனுப்பும் முறை;

e-mail. 'மின்னஞ்சல் மூலம் உங்கள் விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்புங்கள்'.

மின்னல் பெ. (n.) வானில் நொடிப் பொழுதில் மிகுந்த விரைவுடன் பரவி மறையும், இடியுடன் கூடிய ஒளிப் பிழம்பு; lightning.

மின்னழுத்தம் பெ. (n.) மின்னோட்டத் தின் இரு முனைகளுக்கு இடையே காணப்படும் மின் வேறுபாடு; potential.

மினுமினுப்பு

387

மின்னாக்கி பெ. (n.) மின்சாரத்தை உருவாக்கும் கருவி; generator. மின்னிதழ் பெ. (n.) இணையத்தில் வெளியிடப்படும் இதழ்;

e-

magazine, e-joumal. 'அகரமுதலியின் சொல்வயல்' எனும் மின்னிதழ் திங்கள்தொரும் வந்து கொண்டிருக் கின்றது'. மின்னுதல் வி. (v.) 1. மின்னல் பளீரெனத் தோன்றுதல்; (of lightning) flash. மின்னுகிறதே மழை வரும் போலி ருக்கிறது. 2. ஒளிபட்டுப் பள பளத்தல், விட்டுவிட்டு ஒளிர்தல்; shine, glitter, dazzle. 3. ஒளிர்தல்; shine. மின்னொளி பெ. (n.) மிகு ஆற்றல் வாய்ந்த மின்விளக்குகளால் உண்டாக் கப்படும் ஒளி; flood light.

மினுக்கம் பெ. (n.) பளபளப்பு, ஒளிர்தல்;

shine.

மினுக்குதல் வி. (v.) I. ஒளியால் ஒரு பொருள் பளபளப்பாகத் தெரிதல், விட்டுவிட்டு ஒளிர்தல்; shine, glitter. 2. பகட்டு காட்டுதல், ஆடம்பரத் துடன் காட்சி தருதல்; cause to glitter, display. 3. தேய்த்தல்; press (clothes). மினுக்மினுக்கென்று வி.அ. (adv.) விட்டு விட்டு எரிகிற; glow faintly and intermittently. கோயில் விளக்கு மினுக்கு மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது.

மினுங்குதல் வி. (v.) ஒளிர்தல், மினு மினுத்தல்; glitter, glimmer, shine. விளக்கொளியில் மூக்குத்தி மினுங்கின். மினுமினுத்தல் வி. (v.) ஒளியுடன் ஒளிர்தல்; shine brightly but intermittently. மினுமினுப்பு பெ. (n.) I. பளபளப்பு; glitter, shining. 2. முகப்பொலிவு; (healthy) glow.